Rajasthan Crime: மனைவியை நிர்வாணமாக்கி தெருவில் ஊர்வலம்: சந்தேக புத்தியால் சிறைக்கு சென்ற கணவர்
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது.
ராஜஸ்தானில் பழங்குடியின குடும்பத்தைச் சேர்ந்த மனைவி நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல் துறையினர் நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவுறுத்தலின் படி, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தானில் உள்ள பிரதாப்கார் மாவடத்தில் பழங்குடி குடும்பத்தில் கணவன் - மனைவி இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மனைவி மீது சந்தேகம் ஏற்பட்டு கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர். அந்தப் பெண்மணி கணவரின் காலில் விழுந்து கெஞ்சியும் பெண்ணின் ஆடைகளை நீக்கியுள்ள வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது.
இருவரும் கடந்த ஆண்டு திருமணம் நடந்துள்ளது. இருப்பினும், மனைவி மீது சந்தேகம் எழுந்துள்ளது. மனைவியை கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அடித்து, துன்புறுத்தி உள்ளனர். அது மட்டும் இல்லாமல் அந்த பெண்ணின் ஆடைகளை களைந்து, நிர்வாண கோலத்தில் தெருவில் ஊர்வலம் அழைத்து சென்றுள்ளனர்.
இது தொடர்பான முதலமைச்சர் அசோக் கெலாட் சமூக ஊடக பதிவில், ஒரு நாகரீக சமூகத்தில் இதுபோன்ற குற்றவாளிகளுக்கு இடம் கிடையாது. குற்றவாளிகள் விரைவில் பிடிபடுவார்கள்.இந்த வழக்கில் விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டும். குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை அளிக்கப்படும்.” என்று தெரிவித்திருந்தார். இதை தொடர்ந்து போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து, 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்தியது.
இந்நிலையில், இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொடூரத்திற்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து எதிர்ப்பு எழுந்து வருகிறது.