Rahul Gandhi: அனுராக் தாக்கூருக்கு ஒரு நியாயம்? எனக்கொரு நியாயமா? - மக்களவை சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
Rahul Gandhi: மக்களவையில் பேசிய கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
Rahul Gandhi: மக்களவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட தனது உரையின் பகுதிகளை, மீண்டும் சேர்த்திட வேண்டும் என சபாநாயகருக்கு எதிரக்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்:
மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிற்கு ராகுல் காந்தி எழுதிய கடிதத்தில், “ஜூலை 1, 2024 அன்று குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது எனது உரையில் இருந்து எனது கருத்துக்கள் மற்றும் சில பகுதிகள் நீக்கபட்டது தொடர்பாக இந்த கடிதத்தை எழுதுகிறேன்.
சபையின் நடவடிக்கைகளில் இருந்து சில கருத்துகளை நீக்குவதற்கான அதிகாரங்களை தலைவர் பெறுகிறார், ஆனால் குறிப்பிட்ட சில வார்த்தைகள் மட்டுமே, அவைகளின் தன்மை மற்றும் மக்களவையில் நடைமுறை விதிகளின் விதி 380 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், நள்ளிரவு 1 மணிக்கு, எனது உரையின் கணிசமான பகுதியானது, நடவடிக்கைகளில் இருந்து வெறுமனே நீக்கப்பட்டதைக் கண்டு அதிர்ச்சியடைந்தேன்.
Lok Sabha LoP and Congress MP Rahul Gandhi writes to Speaker Om Birla over the remarks and portions from his speech expunged; requests that the remarks be restored.
— ANI (@ANI) July 2, 2024
The letter reads, "...Shocked to note the manner in which considerable portion of my speech have been simply… pic.twitter.com/zoD8A0xvlc
ஜூலை 2 தேதியிட்ட மக்களவையின் திருத்தப்படாத விவாதங்களின் தொடர்புடைய பகுதிகளை இணைக்கிறேன். நீக்கப்பட்ட பகுதிகள் விதி 380ன் கீழ் வராது என்று கூறுவதற்கு நான் கடமைப்பட்டுள்ளேன். நான் சபையில் தெரிவிக்க விரும்புவது அடிப்படை உண்மை, உண்மை நிலை. பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் கூட்டுக் குரலை வெளிப்படுத்தும் ஒவ்வொரு சபை உறுப்பினருக்கும் இந்திய அரசியலமைப்பின் 105 (1) வது பிரிவில் கூறப்பட்டுள்ள பேச்சு சுதந்திரம் உள்ளது. சபையில் மக்கள் பிரச்சனைகளை எழுப்புவது ஒவ்வொரு உறுப்பினரின் உரிமை.
அந்த உரிமையையும், நாட்டு மக்களுக்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகளையும் நிறைவேற்றும் வகையில், நேற்று நான் செயல்பட்டேன். நான் பேசிய கருத்துக்களை பதிவுகளில் இருந்து நீக்குவது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் கொள்கைகளுக்கு எதிரானது.
இந்தச் சூழலில், குற்றச்சாட்டுகள் நிறைந்த ஸ்ரீ அனுராக் தாக்கூரின் பேச்சை நான் இங்கு குறிப்பிட்டு காட்ட விரும்புகிறேன். காரணம், வியக்கத்தக்க வகையில் அவரது உரையில் இருந்து ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டுள்ளது. உங்கள் நல்ல சுயத்திற்கு உரிய மரியாதையுடன் இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட நடவடிக்கை பதவிக்கான தர்க்கத்தை மீறுகிறது. அவை குறிப்புகளில் இருந்து நீக்கப்பட்ட கருத்துகளை மீண்டும் சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.