மேலும் அறிய

Rahul Gandhi : "பயப்படுறவங்க கட்சியை விட்டு போயிடுங்க" : பாஜகவில் இணைந்த விஜயதரணி.. வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ!

மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இன்று இணைந்தார்.

அடுத்த மாத இறுதியில், மக்களவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் என கூறப்படுகிறது. இப்படிப்பட்ட சூழலில், அரசியலில் அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகிறது. பல்வேறு கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுகிறது. 

பாஜகவுக்கு தாவிய விஜயதரணி:

இந்த சூழலில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைந்துள்ளது பெரும் பேசுப்பொருளாக மாறியுள்ளது. தமிழ்நாடு மாநில காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து வந்த கே.எஸ் அழகிரிக்கு பதிலாக செல்வப்பெருந்தகையை புதிய தலைவராக காங்கிரஸ் கடந்த வாரம் நியமனம் செய்தது.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இணைகிறார் என்ற தகவல் கடந்த இரண்டு வாரங்களாக பரவி வந்தது. ஆனால், அந்த தகவல் வதந்தியே, உட்கட்சி பூசல் எதுவும் இல்லை என காங்கிரஸ் சார்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

வைரலாகும் ராகுல் காந்தி வீடியோ:

வெளியான வதந்திகளை உண்மையாக்கும் விதமாக மத்திய இணை அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான எல்.முருகன் தலைமையில், காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதரணி பாஜகவில் இன்று இணைந்தார். இதையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சி அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கம் செய்யப்பட்டார். 

இந்த நிலையில், ராகுல் காந்தி பேசும் பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில், "எதற்கும் பயப்படாத அச்சமற்ற உண்மையான போராளிகளை மட்டுமே காங்கிரஸ் விரும்புகிறது. பயப்படுபவர்கள் கட்சியை விட்டு வெளியேறுங்கள். உங்களுக்கு ஆர்எஸ்எஸ் தான் சரியான இடம்" என ராகுல் காந்தி பேசுவது பதிவாகியுள்ளது. விஜயதாரணி, பாஜகவுக்கு தாவிய அதே நாளில், இந்த வீடியோவை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளது. 

காங்கிரஸ் கட்சியில் இருந்து விஜயதாரணி விலகியது ஏன்?

கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற வசந்தகுமார், 2020ஆம் ஆண்டு, கொரோனா பாதிப்பால் காலமானார். இதனால் அந்த தொகுதிக்கு மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது அந்த தொகுதியில் போட்டியிட விஜயதரணி விரும்பியதாகவும் காங்கிரஸ் மேலிடத்திடம் வாய்ப்பு கேட்டதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் கட்சித் தலைமை விஜயதரணிக்கு வாய்ப்பு கொடுக்காமல் வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்திற்கு வாய்ப்பு கொடுத்து. அவரும் வெற்றி பெற்றார். அப்போதில் இருந்தே, காங்கிரஸ் தலைமை மீது விஜயதரணி அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
148 வருடத்தில் இதுவே முதன்முறை.. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் - யார் அந்த ஹீரோக்கள்?
148 வருடத்தில் இதுவே முதன்முறை.. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் - யார் அந்த ஹீரோக்கள்?
Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ரா ப்ராண்டின் பாக்ஸிங் - XEV 9S Vs XEV 9e எது பெஸ்ட்? ரேஞ்ச், விலை, அம்சங்கள்
Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ரா ப்ராண்டின் பாக்ஸிங் - XEV 9S Vs XEV 9e எது பெஸ்ட்? ரேஞ்ச், விலை, அம்சங்கள்
Embed widget