மேலும் அறிய

ஒசாமா பின்லேடனை போல தாடி வளர்க்கும் ராகுல் காந்தி... சர்ச்சையை கிளப்பிய பீகார் பாஜக தலைவர்..!

"காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒசாமா பின்லேடனைப் போல தாடி வளர்த்து, பிரதமர் நரேந்திர மோடியைப் போல மாற நினைக்கிறார்”

பாஜக தலைவர்கள், சர்ச்சை கருத்துகளை தெரிவிப்பது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில், பிகார் மாநில பாஜக தலைவர், ராகுல் காந்தியை கொல்லப்பட்ட அல் கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனுன் ஒப்பிட்டு பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"தாடி வளர்ப்பதால் மட்டும் ஒருவரால் பிரதமராக வந்து விட முடியாது"

இந்திய ஒற்றுமை பயணத்தின்போது, தாடியை வளர்த்து வந்த ராகுல் காந்தி, நடைபயணம் நிறைவு பெற்றதை தொடர்ந்து, அதை ட்ரிம் செய்தார். இதை சாடும் வகையில் பேசியுள்ள பிகார் மாநில பாஜக தலைவர் சாம்ராட் சௌத்ரி, தாடி வளர்ப்பதால் மட்டும் ஒருவரால் பிரதமராக வந்து விட முடியாது என தெரிவித்துள்ளார். 

பிகார் மாநிலம் அராரியா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஒசாமா பின்லேடனைப் போல தாடி வளர்த்து, பிரதமர் நரேந்திர மோடியைப் போல மாற நினைக்கிறார்” என கூறியுள்ளார்.

ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பிகார் மாநில முதலமைச்சருமான நிதிஷ் குமாரை விமர்சித்து பேசிய சாம்ராட், "நிதிஷ் குமார் நாடு முழுவதும் சுற்றி வருகிறார். நாட்டின் பிரதமர் என்று எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறார். நிதிஷ் குமார் பிரதமரா? நிதிஷ் குமாரின் மனநிலை கஜினி படத்தில் வரும் அமீர்கான் கதாபாத்திரத்தை ஒத்திருக்கிறது" என்றார். அவர் மன நிலையை இழந்துவிட்டாரா அல்லது நான் இழந்துவிட்டேனா? தயவுசெய்து சொல்லுங்கள் என சாம்ராட் சாடியுள்ளார்.

பாஜகவை வீழ்த்த பல்வேறு கட்சிகள் வியூகம் அமைத்து வரும் நிலையில், கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் பெற்ற வெற்றி எதிர்க்கட்சிகளுக்கு ஊக்கம் தந்தது. எனவே, இந்தாண்டின் இறுதியில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அதற்கான களத்தை தயார் செய்ய தொடங்கின எதிர்க்கட்சிகள். அதன் முதல் முயற்சியாக, பிகாரில் மெகா மாநாட்டை நடத்த எதிர்க்கட்சிகள் திட்டமிட்டன. 

பிகாரில் கூடும் எதிர்க்கட்சி தலைவர்கள்:

2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கான வியூகம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சி தலைவர்கள் ஜூன் 12ஆம் தேதி பாட்னாவில் சந்திக்க முடிவு செய்தனர். இந்த கூட்டத்தில், 18 எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொள்ளவிருந்தனர். 

ஆனால், எதிர்க்கட்சிகளின் முயற்சிகளில் பின்னடைவு ஏற்படும் விதமாக, இந்த கூட்டம் தள்ளிவைக்கப்பட்டது. இதையடுத்து, இந்த கூட்டம் ஜூன் 23ஆம் தேதி பாட்னாவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் லலன் சிங், "எதிர்கட்சிகளின் கூட்டம் வரும் 23ஆம் தேதி பாட்னாவில் நடக்கிறது. இதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் சம்மதம் தெரிவித்துள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் டி. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்கின்றனர்" என்றார்.

தலைப்பு செய்திகள்

முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
முன்னணி IT நிறுவனங்களில் வேலை வேண்டுமா? இந்த 4 திறன்களை இப்போதே கற்றுக்கொள்ளுங்கள்!
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
ஏர்டெல் ரீசார்ஜ் விலை உயர்வு: ரூ.299 பிளான் நீக்கம், புதிய குறைந்தபட்ச கட்டணம்! விபரம் இதோ..
Bofors Case: நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
நாட்டையே உலுக்கிய 40 ஆண்டு கால வழக்கு..! முடித்துவைத்த உச்சநீதி மன்றம் - தீர்ப்பு என்ன?
Social Media: 2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?
2 மணி நேரம் தான் டைம்..! சமூக வலைதளங்களுக்கு கெடு விதித்த மத்திய அரசு - காரணம் என்ன?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
இனி பள்ளிப் பாடத்திட்டத்தில் போதைப்பொருள் விழிப்புணர்வு; அதிரடி முடிவெடுத்த அரசு!
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
சியரா டச்சில் காமோ; ரூ.9.99 லட்சத்தில் டேஷ்கேம், ADAS உடன் அசத்தும் டாடா நெக்ஸான் புது எஸ்யூவி!
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Volkswagen Virtus Anniv., Edition: அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
அழகுக்கு அழகை சேர்த்த ஃபோக்ஸ்வேகன்; ஆண்டுவிழா பதிப்பில் புதிய கலரில் மனதை மயக்கும் விர்டஸ்
Embed widget