Rahul Gandhi: சாவர்க்கர் ஒருபோதும் 6 மாதங்கள் வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை; ராகுல் காந்தியை தாக்கி பேசிய அனுராக் தாக்கூர்..!
ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கரைப் போல் இருக்க முடியாது, சாவர்க்கர் எப்போதும் 6 மாதங்களுக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கரைப் போல் இருக்க முடியாது, சாவர்க்கர் எப்போதும் 6 மாதங்களுக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியுள்ளார்.
பாராளுமன்றத்தின் இரு அவைகளும் எதிர்க்கட்சியினரின் தொடர் அமளியால் ஒத்திவைக்கப்பட்டது. அதில், மக்களவை மாலை 4 மணிவரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறியதாவது, “ ராகுல் காந்தி தொடர்ந்து பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சேர்ந்த மக்களை அவமானப்படுத்தி வருகிறார். அவரை பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினைச் சேர்ந்த மக்கள் மன்னிக்க மாட்டார்கள். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், அவர்கள் ஏன் இந்த அரசியல் நாடகத்தினை நடத்திக் கொண்டு உள்ளனர். ராகுல் காந்தியால் ஒருபோதும் சாவர்க்கரைப் போல் இருக்க முடியாது, சாவர்க்கர் எப்போதும் 6 மாதங்களுக்கு வெளிநாட்டிற்கு சுற்றுலா சென்றது இல்லை எனவும் கூறியுள்ளார்.
இதற்கு முன்னதாக,
#WATCH | Rahul Gandhi continuously insulted the OBC community and did not apologise to them. They don't obey court's order. Why are they creating this drama now? He can never be Savarkar as Savarkar never went on a foreign tour for 6 months: Union Minister Anurag Thakur pic.twitter.com/0Xqh2yRXjG
— ANI (@ANI) March 27, 2023
கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியதோடு, மேல் முறையீடு செய்ய 1 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து மார்ச் 25 அன்று பேசினார்.
அப்போது கூறிய அவர், “ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.
நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன்" என குறிப்பிட்டு பேசினார்.
அதானியின் ஷெல் நிறுவனங்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடி பணம் வந்தது எப்படி? மோடிக்கும் அதானிக்கும் என்ன தொடர்பு என்று கேள்வி எழுப்பி இருந்தேன். இதுவரை அதற்கு பதில் இல்லை.
அதானி குறித்து நான் அடுத்த முறை பேசக்கூடாது என்பதற்காகவே என்னைத் தகுதி நீக்கம் செய்துள்ளனர். லண்டனில் நான் பேசியது குறித்து விளக்கம் அளிக்க, மக்களவையில் சபாநாயகரிடம் அனுமதி கோரி இருந்தேன். ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை” என்று ராகுல் காந்தி தெரிவித்தார்.