Punjab Elections 2022 : பஞ்சாபில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்...! சித்து, சரண்ஜித்சிங் சன்னி, சோனு சூட் தங்கை போட்டி எங்கே?
சட்டசபை தேர்தலை முன்னிட்டு பஞ்சாபில் 86 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்றாக பஞ்சாப் விளங்குகிறது. இந்த மாநிலத்தில் வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள காரணத்தால் பஞ்சாப்பில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
பஞ்சாப் காங்கிரஸ் கட்சி 86 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித்சிங் சன்னி சம்கவுர் சாஹிப் தொகுதியில் போட்டியிடுகிறார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரருமான நவ்ஜோத்சில் சித்து அமிர்தரஸ் கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஜல்லிக்கட்டு போட்டிகளை நேரலையில் காண : Live | Palamedu Jallikattu 2022 Live | ஜல்லிக்கட்டு 2022 நேரலை | Pongal 2022 | Jallikattu Live
பஞ்சாப் மாநில துணை முதல்வர்களான சுக்ஜிந்தர்சிங் ராந்தவா வரும் தேர்தலில் தற்போது தேராபாபாநானக் தொகுதியிலும், ஓம்பிரகாஷ்சோனி அமிர்தசரஸ் மத்திய தொகுதியிலும் போட்டியிடுகிறார். சில தினங்களுக்கு முன்பு, பஞ்சாப் காங்கிரசில் இணைந்த பஞ்சாப் பாடகர் சித்து முஸ்செவாலா மான்சா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாலிவுட்டின் பிரபல நடிகர் சோனுசூட்டின் தங்கை மாள்விகா சூட் மோகா தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சர் பிரம்மொகிந்த்ரா இந்த தேர்தலில் போட்டியிடவில்லை. அவருக்கு பதிலாக அவரது மகன் மோகித் மொகிந்த்ரளா பாட்டியாலா தொகுதியில் போட்டியிடுகிறார். அமைச்சர் மன்பிரீத்சிங்பாடல் பாதிண்டா தொகுதியில் போட்டியிடுகிறார். பஞ்சாபில் உள்ள 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் மார்ச் 10-ந் தேதி வெளியாக உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தேர்தலில் சுவாரஸ்யம் ஏற்பட்டுள்ளது, பஞ்சாப்பின் முதல்வராக பொறுப்பு வகித்தவரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கேப்டன் அம்ரீந்தர் சிங் கடந்தாண்டு முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததுடன் காங்கிரசில் இருந்தும் விலகினார். பின்னர், பஞ்சாப் லோக் காங்கிரஸ் எனும் கட்சியை தொடங்கினார். இந்த தேர்தலில், பஞ்சாப் லோக் காங்கிரஸ், பா.ஜ.க. மற்றும் சிரோமணி அகாலி தளம் ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த தேர்தலை சந்திக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்