Punjab Election Result 2022: மக்களின் குரல்.. கடவுளின் குரல்...- தோல்வியை ஒப்புக் கொண்ட சித்து
பஞ்சாப் மாநிலத்தில் அடைந்த தோல்வியை காங்கிரஸ் தலைவர் சித்து ஒப்புக் கொண்டுள்ளார்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தர்காண்ட், மணிப்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்நிலையில், இந்தத் தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை 117 இடங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதில் 59 இடங்களில் வெற்றி பெற்றால் ஆட்சியை பிடித்துவிடலாம் என்ற நிலைமை இருந்தது. ஆனால், ஆம் ஆத்மி கட்சி 89 இடங்களில் முன்னிலை வகித்து கிட்டத்தட்ட ஆட்சியை கைப்பற்றியது.
இந்நிலையில் பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்துள்ள தோல்வி தொடர்பாக நவ்ஜோத் சிங் சித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், “மக்களின் குரல் என்பது கடவுளின் குரல். மக்களின் முடிவை நான் தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறேன். ஆம் ஆத்மி கட்சிக்கு எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
The voice of the people is the voice of God …. Humbly accept the mandate of the people of Punjab …. Congratulations to Aap !!!
— Navjot Singh Sidhu (@sherryontopp) March 10, 2022
காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து சென்று தனியாக கட்சி தொடங்கிய முன்னாள் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் பட்டியாலா தொகுதியில் போட்டியிட்டார். அங்கு அவர் தோல்வி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவத் மன், “புகழ் எப்பொழுதும் என் வாழ்வின் ஒரு பகுதியாக இருக்குமே தவிர முதலமைச்சரானால் அது என் தலையில் ஏறாது. பதவியை நான் ஆளுவேன், ஒருபோதும் பதவி என்னை ஆளாது. நான் இன்னும் மக்கள் மத்தியில் சென்று அவர்களுக்காக, அவர்களுடன் இணைந்து பணியாற்றுவே விரும்புகிறேன். நான் முதலமைச்சரானால் எனது அரசியல் என் தலையை சீர்குலைக்கும் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு அரசியல் ஒன்றும் புதிதல்ல” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் பழைய பஞ்சாபை திரும்ப விரும்புகிறார்கள். அதையேதான் நானும் விரும்புகிறேன். மீண்டும் பஞ்சாப்பை பஞ்சாப் ஆக்குவோம். இதை பாரிஸ், லண்டன் அல்லது கலிபோர்னியாவாக மாற்ற வேண்டிய அவசியமில்லை .
மாஃபியாவால் நிரம்பி வழிக்கிறது பஞ்சாப். மணல் மாபியா, நில மாபியா, கேபிள் மாபியா, போக்குவரத்து மாபியா... கலால் மாபியா என்று நிறைய இருக்கிறது. இதை எதையும் நான் விட்டு வைக்கபோவது இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்