மேலும் அறிய

Rajinikanth Health: ரஜினிக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு..? - மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை!

நடிகர் ரஜினிகாந்துக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் ஆழ்வார்பேட்டையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்துக்கு முழு உடல் பரிசோதனை மற்றும் உறுப்புகள் செயல்பாடுகள் குறித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையின் முடிவில் அவருக்கு ரத்த நாள திசு அழிவு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாம். இதனைத்தொடர்ந்து, ரஜினிக்கு நரம்பியல் மற்றும் இருதய துறை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே சிறுநீரக மாற்று சிகிச்சை செய்துள்ளா நிலையில் மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுவரை ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் எந்தவொரு தகவலும் வெளியிடவில்லை என்று குறிப்பிடத்தக்கது.

முன்னதாக வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக நடிகர் ரஜினிகாந்த் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பாக லதா ரஜினிகாந்த்திடம் இது தொடர்பாக கேட்டபோது ரெகுலர் மாஸ்டர் செக்கப்பிற்காகவே காவிரி மருத்துவமனைக்கு ரஜினி வந்திருக்கிறார் என ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு லதா ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.  ரஜினிகாந்த்  நலமாக இருக்கிறார்  என்றும் லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் ரஜினிக்கு ஒவ்வொரு ஆண்டும் முழு உடல் மருத்துவ பரிசோதனை செய்வது வழக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தாதா சாகேப் பால்கே விருதுடன் சென்னை திரும்பிய ரஜினிகாந்த் நேற்று காலை குடும்பத்துடன் அண்ணாத்த படத்தை பார்த்ததாக தெரிவித்திருந்தார். தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கும் அண்ணாத்த திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் நடந்து வருகிறது. பர்ஸ்ட் சிங்கிளில் தொடங்கி ட்ரெய்லர் வரை படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் படத்தை தனது குடும்பத்துடன் பார்த்துள்ளார் ரஜினிகாந்த் . இது குறித்து ஹூட் செயலியில் பகிந்துள்ள ரஜினிகாந்த் “ நான் என் மகள்கள் , மருமகன் விஷால் , மனைவி, சம்பந்தி மற்றும் பேரன்களுடன்  அண்ணாத்த படத்தை பார்த்தோம். குறிப்பாக என் பக்கத்தில் உட்காந்து பேரன் முதன் முறையாக படம் பார்த்தான். படம் பார்த்து முடித்தவுடன் எனது பேரன் என்னை விடவே இல்லை. கட்டிப்பிடித்து தாத்து தாத்து படம் வெரி நைஸ் என்றான்.அவன் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தால் என்னை தாத்து என அழைப்பது வழக்கம். படம் முடித்து வெளியே வந்த பிறகு கலாநிதி மாறன் திரையரங்கிற்கு வெளியே காத்திருந்தார்.  அதிர்ச்சியாக இருந்தது.. மணி 10க்கு மேல் இருக்கும்..அப்போது என்ன சார் இங்க என கேட்டேன்...இல்லை உங்களை பார்க்கணும் என்றார்.. பிஸியான ஆளாக இருப்பவர் , என்னை சந்திக்கனும் என்றார். எப்போதும் மேன் மக்கள் மேன் மக்களே!” என குறிப்பிட்டார். 

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு... கொட்டிக் கொடுத்த பக்தர்கள்: ரூ. 66 லட்சம் கிடைத்தது
தஞ்சாவூர் பெரியகோயில் உண்டியல்கள் திறப்பு... கொட்டிக் கொடுத்த பக்தர்கள்: ரூ. 66 லட்சம் கிடைத்தது
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்! 6 நாட்களாக நீடிக்கும் மர்மம்… 10 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்!
செஞ்சி அருகே 7 வயது சிறுமி மாயம்! 6 நாட்களாக நீடிக்கும் மர்மம்… 10 தனிப்படைகள் அமைத்து போலீஸ் தீவிர தேடுதல்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!

வீடியோ

Odisha Lorry Accident : அதிவேகமாக வந்த லாரி.. அடுத்தடுத்து மோதிய வாகனங்கள்! பகீர் சிசிடிவி காட்சி
Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Deva: யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
யார் இந்த தேனிசை தென்றல் தேவா..! கானாக்களின் God Father - பட்டிதொட்டியெல்லாம் ஹிட் அடித்த ”ஆட்டோக்காரன்”
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Musician Deva: 'தேனிசை தென்றல்' தேவா மரணம்.. தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சி.. சோகத்தில் திரையுலகம்
Anirudh Kavya: அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
அனிருத் - காவ்யா மாறன் காதல் கதை..! வதந்திகளாக தொடங்கி க்ரீஸில் உறுதியான கல்யாணம்- முழு கதை
L.Murugan: எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
எல். முருகன் ஓரங்கட்டப்பட்டது ஏன்? இனி கம்பேக்கே இல்லையா? ரெய்டு டூ ரிப்போர்ட் வரையிலான சர்ச்சை
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
இன்னும் எத்தனை லியோ தாஸ்.. சொந்தக் கட்சியிலேயே போதை மாபியா.. விஜயை விளாசியெடுத்த ஸ்டாலின்!
Gem Veeramani: ”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
”சதி வலையில் விழுந்தேன், கோடிகளை இழந்தேன்” - வாக்குமூலத்தில் புலம்பிய ஜெம் வீரமணி
Vilupuram Child: 6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
6 நாட்களாகியும் கிடைக்காத விழுப்புரம் சிறுமி - ரூ.2 லட்சம் பரிசு அறிவிப்பு - சிக்கிய சாமியார்?
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
தப்பா பேசுவீங்களோ.. நாங்க பேச ஆரம்பிச்சா அவ்வளவு தான்.. மோகன் ஜியை எச்சரித்த திருநங்கைகள்!
Embed widget