மேலும் அறிய

மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்ட போலீஸ்? மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதல்? - ஜந்தர் மந்தரில் நடந்தது என்ன?

மது அருந்திய காவல்துறை அதிகாரிகள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

டெல்லி ஜந்தர் மந்தரில் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங்குக்கு எதிராக மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிஜ் பூஷனுக்கு எதிராக மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தியது விளையாட்டு உலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

பாலியல் புகாரில் சிக்கியுள்ள பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வீரர்கள், வீராங்கனைகள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில், மது அருந்திய காவல்துறை அதிகாரிகள் சிலர், போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மல்யுத்த வீரர்கள் மீது நேற்று இரவு தாக்குதல் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. 

போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் மீது தாக்குதலா?

போராட்டம் நடத்தப்பட்டு வரும் இடத்தில் கடும் குளிர் வீசி வருவதால் படுக்கையை எடுத்து வந்ததாகவும் அப்போது தங்கள் மீது காவல்துறை அதிகாரிகள் தாக்குதல் நடத்தியதாக மல்யுத்த வீரர்கள் புகார் கூறியுள்ளனர். பெரும்பாலான மல்யுத்த வீரர்களுக்கு தலையில் காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் சுயநினைவின்றி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பு அளித்த விளக்கத்தில், "ஆம் ஆத்மி எம்எல்ஏ சோம்நாத் பாரதி அனுமதியின்றி மடிந்த படுக்கைகளுடன் போராட்ட இடத்திற்கு வந்தார். போலீசார் தலையிட்டபோது, ​​ஒரு சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, எம்எல்ஏவும் வேறு இருவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக சமூக வலைதளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில், குடிபோதையில் உள்ள போலீஸ்காரர்கள்  தங்களை தாக்கியதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டுவதைக் கேட்கலாம்.

மது அருந்தி அட்டகாசத்தில் ஈடுபட்டனரா காவல்துறை அதிகாரிகள்?

"குடிபோதையில் உள்ள தர்மேந்திரா என்ற போலீஸ்காரர், மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை தாக்கி எங்களுடன் கைகலப்பில் ஈடுபட்டார்" என முன்னாள் மல்யுத்த வீரர் ராஜ்வீர் தெரிவித்துள்ளார். தன்னுடைய தம்பி துஷ்யந்த் போகத்தின் தலையை அடித்து உடைத்ததாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற கீதா போகட் குற்றம்சாட்டியுள்ளார்.

போராட்டம் நடைபெற்றும் வரும் இடத்தில் மயங்கி விழுந்த வினேஷ் போகத், "இப்படி நடத்தப்படுவதற்கு நாங்கள் குற்றவாளிகள் அல்ல. நீங்கள் எங்களைக் கொல்ல விரும்பினால், எங்களைக் கொல்லுங்கள்" என சொன்னபடி கதறி அழுதார்.

சில போலீசார் குடிபோதையில் இருந்ததாக எழுந்த புகாரை டெல்லி போலீசார் நிராகரித்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு எதிராக எந்த படையையும் பயன்படுத்தவில்லை என்றும், மோதலில் 5 போலீசார் காயம் அடைந்ததாகவும் போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

மோதலைத் தொடர்ந்து, போராட்டம் நடந்த இடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், அப்பகுதி முழுவதும் தடுப்புகள் போடப்பட்டு, ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்களை அணுக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Maruti Suzuki SUV: 7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
7 எஸ்யுவிக்களை நாங்க கொடுக்கிறோம்..! மாருதி அதிரடி - 7 சீட்டர், ஹைப்ரிட், EV, CNG - முழு லிஸ்ட்
Holiday Special Bus : சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
சுதந்திர தின தொடர் விடுமுறை.! வெளியூர் செல்ல சிறப்பு பேருந்து- எங்கிருந்து எங்கே.? லிஸ்ட் இதோ..
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Solar EV Car: இந்தியாவின் முதல் சோலார் EV கார் அறிமுகம்; ஒரே சார்ஜில் 250 கி.மீ. ரேஞ்ச்- விலை, சிறப்பம்சங்கள்?
Chennai Power Cut: சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
சென்னையில் ஆகஸ்ட் 13-ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின் தடை ஏற்படப் போகிறது தெரியுமா.? இதோ லிஸ்ட்
Embed widget