Ganga Vilas Cruise: 27 நதிகள் வழி பயணம்... உலகின் மிகப்பெரிய சொகுசுக் கப்பல்.. கங்கா விலாஸ் சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர்..!
உலகின் மிக நீளமான சொகுசுக் கப்பலை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
மிக நீண்ட பயணம் செய்யும் சொகுசுக்கப்பல்
உலகின் மிக நீண்ட தூரணம் பயணிக்கும் சொகுசுக் கப்பலை உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார்.
The beginning of the world's longest river cruise service on river Ganga is a landmark moment. It will herald a new age of tourism in India: PM Narendra Modi pic.twitter.com/5MTmkPtoeV
— ANI (@ANI) January 13, 2023
வாரணாசியில் இருந்து வரும் சொகுசுக் கப்பல் இந்தியா மற்றும் வங்கதேசத்தில் உள்ள ஐந்து மாநிலங்களில் உள்ள 27 நதி அமைப்புகளின் வழியாக 3,200 கிமீ தூரம் பயணிக்கும். ரவிதாஸ் காட் பகுதியில் ஒரு கப்பல் தயாராக உள்ளது. அங்கு 31 பயணிகள் 50 இடங்கள் வழியாக 51 மணி நேர பயணத்தை மேற்கொள்வார்கள்.
கங்கா விலாஸ் கப்பல்:
MV கங்கா விலாஸ் கப்பலில் மூன்று தளங்கள் மற்றும் 18 அறைகள் உள்ளன, இதில் 36 சுற்றுலாப் பயணிகள் பயணிக்கும் வகையில் உள்ளது. இந்த கப்பலில் உடற்பயிற்சி கூடம், ஸ்பா மையம், நூலகம் போன்றவை உள்ளன. சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியிலிருந்து 31 பயணிகளைக் கொண்ட குழு, கப்பலின் 40 பணியாளர்களுடன் பயணத்தைத் தொடங்கவுள்ளது. க்ரூஸ் கப்பல் தலைவர் ராஜ் சிங் தனியார் தொலைக்காட்சியிடம் பேசிய போது, "இந்த கப்பல் 27 நதி அமைப்புகள் வழியாக செல்லும். இது வங்காளதேசத்துடனான தொடர்பை மேம்படுத்தும்" எனக் கூறினார்.
இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு பார்வையால் இவை அனைத்தையும் சாத்தியப்படுத்தியுள்ளதாக மத்திய அமைச்சர் சர்வானந்தா சோனோவால் தெரிவித்தார். public–private partnership மாதிரியின் கீழ் கங்கா விலாஸ் திட்டம் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
எங்கெல்லாம் நிற்கும்..?
வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற "கங்கா ஆரத்தி"யில் இருந்து, இது பௌத்த மதத்திற்கு மிகவும் மரியாதைக்குரிய இடமான சார்நாத்தில் நிறுத்தப்படும். இந்த சொகுசுக் கப்பல் தாந்த்ரீக கைவினைகளுக்கு பெயர் பெற்ற மயோங் மற்றும் அஸ்ஸாமில் உள்ள மிகப்பெரிய நதி தீவு மற்றும் வைஷ்ணவ கலாச்சாரத்தின் மையமான மஜூலி ஆகிய இடங்களில் நின்று பயணிக்கும்.
பயணிகள் பீகார் ஸ்கூல் ஆஃப் யோகா மற்றும் விக்ரம்ஷிலா பல்கலைக்கழகத்தையும் பார்வையிடுவார்கள், இது ஆன்மீகம் மற்றும் அறிவின் அடிப்படையில் இந்திய பாரம்பரியத்தை சுற்றுலா பயணிகளிடையே எடுத்துச் செல்லும். வங்காளப் புலிகளுக்குப் புகழ்பெற்ற வங்காள விரிகுடா டெல்டாவில் உள்ள சுந்தர்பனின் பல்லுயிர் நிறைந்த உலக பாரம்பரிய தளங்கள் மற்றும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களுக்குப் புகழ்பெற்ற காசிரங்கா தேசியப் பூங்கா வழியாகவும் இந்தக் கப்பல் பயணிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.