ராணுவ வீரர்களுக்கு விசிஸ்ட் சேவா பதக்கங்களை வழங்கிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!
ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்தியக் கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 94 பேருக்கு, சேவா பதக்கங்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் இந்தியக் கடலோர காவல் படையில் சிறப்பாக பணியாற்றிய 94 பேருக்கு, சேவா பதக்கங்களை குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.
சேவா பதக்கங்களை வழங்கிய குடியரசு தலைவர்: கடற்படை தளபதி அட்மிரல் தினேஷ்குமார் திரிபாதி, ராணுவ தளபதி ஜென்ரல் உபேந்திர துவிவேதி, ராணுவத் துணைத்தளபதிகள் சுசீந்திர குமார், ராஜா சுப்பிரமணி உள்ளிட்ட 31 பேருக்கு பரம் விசிட் சேவா பதக்கங்களையும் (பிவிஎஸ்எம்), 4 பேருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கங்களையும், இருவருக்கு பார் டு அதிவிசிட் சேவா பதக்கங்களையும் 57 பேருக்கு அதி விசிட் சேவா பதக்கங்களையும் குடியரசுத்தலைவர் வழங்கினார்.
லெப்டினன்ட் ஜெனரல் வீரேஷ் பிரதாப் சிங் கௌஷிக், லெப்டினன்ட் ஜெனரல் ரஷிம் பாலி, லெப்டினன்ட் ஜெனரல் மனிஷ் மோகன் எர்ரி, லெப்டினன்ட் ஜெனரல் ஹர்ஜீத் சிங் சாஹி ஆகியோருக்கு உத்தம் யுத்த சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
பதக்கங்களை பெற்ற ராணுவ வீரர்கள்: லெப்டினன்ட் ஜெனரல் எஸ் ஹரிமோகன் ஐயர், மேஜர் ஜெனரல் ராஜேஷ் குமார் ஜா ஆகியோர் பார் டு அதிவிசிட் சேவா பதக்கங்களை பெற்றுள்ளனர். லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சிந்தர் சிங், லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சூரி, லெப்டினன்ட் ஜெனரல் மஞ்சித் குமார், லெப்டினன்ட் ஜெனரல் அரவிந்த் வாலியா, லெப்டினன்ட் ஜெனரல் ராகேஷ் கபூர் ஆகியோருக்கு அதிவிசிட் சேவா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன.
வைஸ் அட்மிரல் சஞ்சய் பல்லா, வைஸ் அட்மிரல் வினீத் எம்.சி. கார்டி, வைஸ் அட்மிரல் குர்ச்சரன் சிங் ஆகியோரும் அதிவிசிட் சேவா பதக்கங்களை பெற்றுள்ளனர்.