President Speech : இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் வெற்றி..! ஜனாதிபதி திரௌபதி முர்முவின் முதல் சுதந்திரதின பேச்சு..!
இந்திய சுதந்திரம் என்பது ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என குடியரசுத் தலைவராகிய பிறகு திரௌபதி முர்மு தனது முதல் சுதந்திர தின உரையில் பேசியுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, தான் குடியரசுத் தலைவராக பதவியேற்ற பின் கொண்டாடப்படும் சுதந்திர தின கொண்டாட்டம் என்பதால், நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்த அற்புதமான நாளில் உங்களிடம் உரையாடுவதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மேலும், அவர் தனது வாழ்த்து உரையில், இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப் பெரிய வெற்றி என கூறியுள்ளார். மேலும், அவர் தனது வாழ்த்தில், இந்தியா ஒருபோதும் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை மறக்காது. நமது நாட்டின் மூவண்ணக் கொடியான தேசியக் கொடி நாட்டில் அனைவரது வீட்டிலும் பறக்கிறது. சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடியினர் பிராந்திய வீரர்களாக மட்டுமில்லாமல், நாட்டின் அடையாளமாக விளங்குகின்றனர். 2047ஆம் ஆண்டு நமது சுதந்திர போராட்ட வீரர்களின் கனவு நனவாக்கி இருக்க வேண்டும். நமது சுதந்திர போராட்ட வீரர்களை நான் நினைத்துப் பார்க்கிறேன். மேலும், இந்தியாவின் ஆரம்பத்தில் இருந்தே பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
கொரோனா காலத்தில் அனைத்து நாடுகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்த போது, இந்தியா அதில் இருந்து மிகவும் விரவாக மீண்டு வந்தது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளைக் கொண்டு மிகப் பெரிய சாதனைகளை நாம் செய்துள்ளோம். 200 கோடி தடுப்பூசிகளைச் செலுத்தி பல வளர்ந்த நாடுகளை விட முன்னோக்கிச் சென்றுள்ளோம்.
In address to nation, President Murmu bows to all men, women who made it possible for us to live in free India
— ANI Digital (@ani_digital) August 14, 2022
Read @ANI Story | https://t.co/LedEltIydH#DroupadiMurmu #PresidentofIndia #IndependenceDay2022 pic.twitter.com/eaaHKaSjfJ
இதற்கு முன்னதாக பிரதமர் மோடி, நாட்டின் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தினை நாடு முழுவதும் மிகவும் கோலாகளமாக கொண்டாட நாட்டின் அனைவரது வீட்டிலும் கொடி ஏற்ற கேட்டுக்கொண்டார். அதேபோல் அனைவரும் அவரவர் சமூக வலைதளங்களில் தேசியக் கொடியை முகப்பு படமாக வைக்கவும் கேட்டுக் கொண்டார். அதேபோல், நாட்டின் அனைத்து பொது இடங்களிலும் தேசியக் கொடியினை ஏற்றி கொண்டாடவும் கேட்டுக் கொண்டார். இதில் அவர் நாடு முழுவதும் ஏற்றப்பட்ட தேசிய கொடிகளில் அவரது மனதைக் கவர்ந்த கொண்டாட்டங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
This is a very special gesture which has enriched the #HarGharTiranga movement. https://t.co/3Behvcntef
— Narendra Modi (@narendramodi) August 14, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்