திமுகவையெல்லாம்? வம்ச அரசியல், ’வளர்ச்சியே இதனால்தான் பாதிப்பு’ : விமர்சித்த பிரதமர் மோடி
பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் சூழலில், அந்த கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பெங்களூருவில் எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறும் சூழலில், அந்த கூட்டணியை பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரதமர் மோடி உரை:
அந்தமான் நிகோபார் தீவுகளில் போர்ட் பிளேயர் பகுதியில் உள்ள வீர சாவர்க்கார் விமான நிலையத்தின், புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டடத்தை பிரதமர் மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். சுமார் 710 கோடி ரூபாய் செலவில் 40 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள புதிய முனைய கட்டடம் ஆண்டிற்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறன் கொண்டுள்ளது. புதிய கட்டடத்தை திறந்து வைத்த பிறகு பேசிய பிரதமர் மோடி “புதிய முனைய கட்டடம் மூலம் போர்ட் பிளேயருக்கும், அங்கு இருந்து மேற்கொள்ளப்படும் பயணம், வர்த்தகம் மற்றும் இணைப்புகள் ஆகியவை மேம்படும்.
ராகுல் காந்தியை விமர்சித்த பிரதமர் மோடி:
பெங்களூருவில் நடைபெறும் எதிர்கட்சிகளின் கூட்டத்தின் சிறப்பு என்னவென்றால், கோடிக்கணக்கான ரூபாய் ஊழலில் சிக்கி ஜாமீனில் வெளிவருபவர்களுக்கு அவர்கள் மிகுந்த மரியாதை வழங்குகின்றனர். ஒட்டுமொத்த குடும்பமும் ஜாமீனில் வெளியில் இருந்தால், அவர்கள் அதிக மரியாதைக்குரியவர்கள். ஒருவர் ஒரு சமூகத்தை அவமதித்து நீதிமன்றத்தால் தண்டிக்கப்படுகிறார் என்றால், அவர் கௌரவிக்கப்படுகிறார். (மறைமுகமாக ராகுல் காந்தி மீது சாடல்)
”ஜாதி அரசியல் செய்யும் எதிர்கட்சிகள்”
2024ம் ஆண்டு நடைபெறும் தேர்தல் மூலம் எங்களை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வர நாட்டு மக்கள் ஏற்கனவே முடிவு செய்தவிட்டனர். அதனால் தான், இந்தியாவின் அவல நிலைக்கு காரணமானவர்கள் தற்போது தங்கள் கடைகளைத் திறந்துள்ளனர். நாட்டின் வளர்ச்சி, இறையாண்மை என எதை எதையோ அவர்கள் பேசுகின்றனர். ஆனால், உண்மை வேறாக உள்ளது. கூட்டணிக்கான நோக்கம் என்ற பெயரில் ஒரு போஸ்டரை ஒட்டியுள்ளனர். ஆனால் அதன் உண்மை தன்மை என்பது வேறு. அவர்களுடைய கடைகளில் ஜாதிவெறி விஷமும், அபரிமிதமான ஊழலும் உள்ளது என்பதற்கு உத்திரவாதம் உள்ளது. இப்போது, அவர்கள் பெங்களூருவில் இருக்கிறார்கள்.
”வம்ச அரசியல்வாதிகள்”
தொடர்ந்து எதிர்கட்சிக்ளை கடுமையாக விமர்சித்த மோடி, ஜனநாயகத்தில் மக்களால், மக்களுக்காக மக்களே செய்து கொள்ளும் ஆட்சி மக்களாட்சி. ஆனால் வம்ச அரசியல் கட்சிகளுக்கு, குடும்பத்தால் குடும்பத்திற்காக குடும்பமே செய்து கொள்ளும் ஆட்சி குடும்ப ஆட்சி. அவர்களுக்கு குடும்பமே முதன்மை, நாடு எல்லாம் அவர்களுக்கு பொருட்டே கிடையாது. இதுதான் அவர்களின் பொன்மொழி. வெறுப்பும், ஊழலும், சமாதான அரசியலுமே உள்ளது. வம்ச அரசியலின் நெருப்புக்கு நாடு பலியாகியுள்ளது. அவர்களுக்கு அவர்களின் குடும்ப வளர்ச்சி மட்டுமே முக்கியம். நாட்டில் உள்ள ஏழைகளின் வளர்ச்சி அல்ல.
திமுகவை சாடிய பிரதமர்:
பெங்களூருவில் திரண்டு வந்த எதிர்க்கட்சிகளிடம் ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்டால் அனைவரும் அமைதி காக்கிறார்கள். மேற்கு வங்க பஞ்சாயத்து தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டது, அப்போது அனைவரும் அமைதியாக இருந்தனர். காங்கிரஸும், இடதுசாரித் தொண்டர்களும் தங்களின் பாதுகாப்பிற்காக மன்றாடிக் கொண்டிருந்தனர். ஆனால் அந்த கட்சிகளின் தலைவர்கள் சுயநலவாதிகள், இக்கட்டான சூழ்நிலையில் தொண்டர்களை விட்டுவிடுகிறார்கள். தமிழகத்தில் பல ஊழல் வழக்குகள் இப்போது அம்பலமாகி வருகின்றன ஆனால் அவர்கள் சுத்தமானவர்கள் என ஏற்கனவே எதிர்கட்சியினர் சான்றிதழ் வழங்க தொடங்கி விட்டனர்” என்று திமுகவையும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்துள்ளார்.