மேலும் அறிய

Sadhguru Brain Surgery : என்னைப் பத்தி கவலையே இருக்கக்கூடாது.. நலம் விசாரித்த பிரதமருக்கு நன்றி சொன்ன சத்குரு..

Sadhguru Brain Surgery : மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சத்குரு ஜக்கி வாசுதேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். 

மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக சிகிச்சைப் பெற்று வரும் சத்குரு ஜக்கி வாசுதேவை பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்துள்ளார். 

கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தின் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ், தொடர்ந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். உலகளவில் மண்வள பாதுகாப்பு விழிப்புணர்வை 100 நாட்களில் 27 நாடுகளுக்கு பைக்கில் பயணம் செய்தார். 30 ஆயிரம் கி.மீ., பைக்கில் சென்றார். இதனிடையே கடந்த மார்ச் 8 ஆம் தேதி நடைபெற்ற மகா சிவராத்திரி விழா கோவையில் உள்ள ஈஷா மையத்தில் கோலாகலமாக நடைபெற்றது. 

இதில் உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் பங்கேற்ற நிலையில் சத்குரு ஜக்கி வாசுதேவ் தலைமையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இதனிடையே மூளையில் ஏற்பட்ட திடீர் ரத்தக்கசிவு காரணமாக ஜக்கி வாசுதேவ் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

சிறிது காலமாகவே ஒற்றை தலைவலி பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சத்குருவுக்கு கடந்த 14ஆம் தேதி அவருக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டு, கடுமையான வாந்தி ஏற்பட்டுள்ளது. இதனால் அவரது பாதுகாவலர்கள் சத்குருவை உடனடியாக டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிடி ஸ்கேன் எடுத்து பார்த்த போது, மூளையின் ஒருபகுதியில் ரத்தக்கசிவு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது. இதனால் அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.

மூளை நரம்பியல் நிபுணர்கள் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த ரத்தக்கசிவை சரி செய்தனர். இதையடுத்து வெண்டிலேட்டர் சிகிச்சையில் இருந்த சத்குரு, தற்போது வெண்டிலேட்டர் அகற்றப்பட்டு விரைவாக குணமடைந்து வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனிடையே சத்குரு ஜக்கி வாசுதேவ்  குணமடைய பிரபலங்களும், ஈஷா பக்தர்களும் தாங்கள் பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் பிரதமர் மோடி தொலைபேசி வாயிலாக சத்குரு ஜக்கி வாசுதேவை தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாக எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். இதனை குறிப்பிட்டு பதிலளித்துள்ள அவர், “அன்புள்ள பிரதமர் அவர்களே.. நான் உங்களுக்கு ஒரு கவலையாக இருக்கக் கூடாது. நீங்கள் வழிநடத்துவதற்கு ஒரு தேசம் உள்ளது. நான் மீண்டு வரும் உங்கள் நலம் விசாரிப்பால் நெகிழ்ச்சியடைந்தேன்” என தெரிவித்துள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aloor Shanavas: என்னது விஜய் கூத்தாடியா? உங்க தலைவர் திருமா யாரு? ஷா நவாஸை பொளக்கும் பிரபலங்கள்!Aadhav Arjuna: VCK Issue : ஆதவ் பற்றவைத்த நெருப்புகோபத்தில் விசிக சீனியர்ஸ்! கட்சியை காப்பாற்றுவாரா திருமா?VIjay Aadhav Arjuna : விஜய்க்கு வேலைபார்க்கும் ஆதவ்?2026ல் விசிக யார் பக்கம்? திருமாவின் SILENT MODE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Leave: ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஜாலிதான்.! பள்ளிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை: ஆரம்பிக்கும் கார்த்திகை தீப விழா கொண்டாட்டம்.!
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
ஆதவ் அர்ஜுனாவிடம் நான் சொல்லி அனுப்பி வைத்தது இதுதான் - போட்டு உடைத்த திருமாவளவன்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
திருமாவுக்கு அழுத்தமா? அவர் எப்படி பட்டவர் தெரியுமா? - விஜய்க்கு அமைச்சர் ரகுபதி பதில்
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
இறுமாப்புடன் சொல்கிறேன்.... - தவெக தலைவர் விஜய்க்கு கனிமொழி கொடுத்த பதிலடி
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
ஒரே நேரத்தில் பலருடன் தகாத உறவு.. “பொண்டாட்டிய கொலை பண்ணிட்டேன்” - போலீசை அலறவிட்ட நபர்
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
நான் பலவீனமானவனா விஜய் ?... சென்னையில் எகிறி அடிக்கும் திருமா
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
Udhaynidhi On Vijay: ”அந்த அறிவு கூடவா இல்லை” - சினிமாக்காரர் விஜய்க்கு பதிலடி தந்த உதயநிதி
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
EPS Condemns DMK: ”கைவிட்டுப்போகும் முல்லைப் பெரியாறு அணை, மவுனம் காக்கும் திமுக அரசு” - ஈபிஎஸ் கடும் தாக்கு
Embed widget