பிரதமர் மோடி கொடுத்த ஹெல்த் டிப்ஸ்.. எல்லாரும் இதை தெரிஞ்சுக்கோங்க மக்களே!
எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை ஒருங்கிணைந்து ஏற்படுத்துவதன் மூலம் உடல் தகுதி மிக்க, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உலக கல்லீரல் தினத்தை முன்னிட்டு, அனைத்து குடிமக்களும் கவனத்துடன் உணவுப் பழக்கங்களை கடைப்பிடித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் மோடி கொடுத்த ஹெல்த் டிப்ஸ்:
சிறிய ஆனால் தாக்கத்தை ஏற்படுத்தும் மாற்றங்களின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற நடவடிக்கைகள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கு குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்க முடியும் என்பதை எடுத்துரைத்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் மத்திய அமைச்சர் ஜெ. பி. நட்டாவின் பதிவுக்கு பதிலளித்த மோடி கூறியிருப்பதாவது, "கவனத்துடன் உண்ணுவேன், ஆரோக்கியமான வாழ்க்கையை நடத்துவேன் என்ற உறுதிமொழியுடன் உலக கல்லீரல் தினத்தைக் கொண்டாடுவது பாராட்டுக்குரிய முயற்சியாகும்.
"எண்ணெய் சேர்த்து கொள்வதை குறைச்சுக்கோங்க"
எண்ணெய் உட்கொள்ளலைக் குறைப்பது போன்ற சிறிய செயல்கள் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் பருமன் பற்றிய விழிப்புணர்வை ஒருங்கிணைந்து ஏற்படுத்துவதன் மூலம் உடல் தகுதி மிக்க, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவோம். #StopObesity” என குறிப்பிட்டுள்ளார்.
கல்லீரல் நோய்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 19 ஆம் தேதி உலக கல்லீரல் தினம் அனுசரிக்கப்படுகிறது. கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை தேர்வுகளை தனிநபர்கள் மேற்கொள்ளவும் இது ஊக்குவிக்கிறது. இந்தாண்டு, உலக கல்லீரல் தினத்திற்கான கருப்பொருள் 'உணவே மருந்து' என்பதாகும்.
Commendable effort to mark #WorldLiverDay with a call for mindful eating and healthier living. Small steps like reducing oil intake can make a big difference. Together, let’s build a fitter, healthier India by raising awareness about obesity. #StopObesity https://t.co/CNnlonFHhW
— Narendra Modi (@narendramodi) April 19, 2025
கல்லீரல் உங்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. இது நச்சுகளை வடிகட்டி, செரிமானத்திற்கு உதவுகிறது. ஆற்றலைச் சேமிக்கிறது. நோயெதிர்ப்பு மண்டலத்தை ஒழுங்குபடுத்துகிறது. இருப்பினும், கல்லீரல் பிரச்னை இருப்பது மன அழுத்தமாகவோ அல்லது உடல்நிலை சரியில்லாமல் போவதன் மூலமாகவே ஏதோ தவறு இருப்பதற்கான அறிகுறிகளை தெரிய வரும்.

