மேலும் அறிய

"நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது" ஆக்ரோஷமாக பேசிய பிரதமர் மோடி!

டிஜிட்டல் புரட்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக தகவல் சமத்துவம் என்பது சாத்தியமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் தேசிய கற்றல் வாரத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், கர்மயோகி இயக்கத்தின் மூலம், நமது நாட்டின் வளர்ச்சியின் உந்து சக்திக்கு ஏற்ற மனித வளத்தை உருவாக்குவதே நமது குறிக்கோள் என்று கூறினார்.

இதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திருப்தி தெரிவித்த பிரதமர், இந்த ஆர்வத்துடன் நாம் தொடர்ந்து பணியாற்றினால், நாடு முன்னேறுவதை யாராலும் தடுக்க முடியாது என்று கூறினார். தேசிய கற்றல் வாரத்தின் போது புதிய கற்றல்களும் அனுபவங்களும் வலிமையை அளித்து, பணி முறைகளை மேம்படுத்த உதவும் என்று அவர் கூறினார்.

பிரதமர் மோடி பேசியது என்ன?

இது 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற நமது இலக்கை அடைய உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். கடந்த 10 ஆண்டுகளில்  மாற்றத்துக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் விளக்கினார்.

அதன் நல்ல தாக்கத்தை இன்று மக்கள் உணர்ந்து வருகின்றனர் என்று அவர் கூறினார். அரசில் பணியாற்றுபவர்களின் நல்ல முயற்சிகள், கர்மயோகி இயக்கம் போன்ற நடவடிக்கைகளின் காரணமாக இது நடைபெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

செயற்கை நுண்ணறிவை உலகம் ஒரு வாய்ப்பாக பார்க்கும் அதே வேளையில், இந்தியாவுக்கு இது ஒரு சவாலாகவும் வாய்ப்பாகவும் உள்ளது என்று பிரதமர் தெரிவித்தார். நல்ல மாற்றத்துக்கான இந்தியாவை உருவாக்க, செயற்கை நுண்ணறிவை நாம் வெற்றிகரமாக பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.

"மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை"

டிஜிட்டல் புரட்சி, சமூக ஊடகங்களின் தாக்கம் ஆகியவை காரணமாக தகவல் சமத்துவம் என்பது சாத்தியமாகிவிட்டது என்றும் பிரதமர் கூறினார். செயற்கை நுண்ணறிவுடன், தகவல் செயலாக்கமும் சமமாக எளிதாகி வருகிறது என்று அவர் தெரிவித்தார்.

மக்களுக்கு தகவல் தெரிவிப்பதுடன் அரசின் அனைத்து நடவடிக்கைகளையும் மக்கள் கண்காணிக்க முடிகிறது என்று அவர் குறிப்பிட்டார். எனவே, உயர்ந்து வரும் தேவைகளை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்திய தொழில்நுட்ப வளர்ச்சிகளுக்கு ஏற்ப அரசு ஊழியர்கள் தங்களை இணைத்துக் கொள்ள வேண்டும் என்றும் இதற்குக் கர்மயோகி இயக்கம் உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

புதுமையான சிந்தனை, மக்களை மையமாகக் கொண்ட அணுகுமுறை ஆகியவற்றைப் பின்பற்றுவதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார். புதிய சிந்தனைகளைப் பெறுவதற்கு புத்தொழில் நிறுவனங்கள், ஆராய்ச்சி முகமைகள், இளைஞர்களின் உதவி ஆகியவற்றை நாடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi : ”திராவிடத்தை தவிர்த்த RN ரவி? திட்டமிட்ட செயலா?” ஆலோசகர் திடீர் விளக்கம்Ponmudi vs Senji Masthan : Serious Mode-ல் பொன்முடி!ஹாயாக பிஸ்கட் சாப்பிட்ட மஸ்தான்!பதறிய அதிகாரிகள்Pradeep John vs Sumanth Raman : பிரதீப் ஜான் vs சுமந்த் ராமன்!காரசார வாக்குவாதம்”சும்மா நொய் நொய்-னு”Arun IAS | ”ஐயா நீங்க நல்லா TOP-ல வருவீங்க”காரை நிறுத்திய முதியவர்! நெகிழ்ந்து போன IAS அதிகாரி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெக கொடிக்கு மீண்டும் சிக்கலா?
விஜய்க்கு நோட்டீஸ்.. பிஎஸ்பி எடுத்த அதிரடி முடிவு.. தவெகவுக்கு மீண்டும் சிக்கலா?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
TN Rains: மக்களே அலர்ட்! அடுத்த இரண்டு நாட்களுக்கு காத்திருக்கு கனமழை - எந்தெந்த ஊரில்?
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
Breaking News LIVE 19th OCT 2024: சூழ்ச்சிகளை சுட்டிக்காட்டினால் அக்காவுக்கு கோபம் வருகிறது: உதயநிதி
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
ஈஷாவை விட பெண்களுக்கு பாதுகாப்பான இடம் உலகத்திலேயே இருக்க முடியாது - ஈஷா பெண் துறவிகள்
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
மீண்டும் மாவோயிஸ்ட் தாக்குதல்.. சத்தீஸ்கரில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்கள்.. பதற்றம்!
ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!
ஒரு தோட்டா கூட சுடாமல், முழு தேசத்தையே அழிக்க முடியும்- பாதுகாப்புத்துறை அமைச்சர் பரபர.!
IND vs NZ:  சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
IND vs NZ: சர்பராஸ், ரிஷப் அபார ஆட்டம்! நியூசி.க்கு 107 ரன்கள் டார்கெட்! பந்துவீச்சில் அதிசயம் நிகழ்த்துமா இந்தியா?
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
கரும்பு விவசாயிகளுக்கு ரூ.247 கோடி ஊக்கத்தொகை - தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
Embed widget