"கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்த சீர்திருத்தங்கள்" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
நிர்வாக சீர்திருத்தங்களும், கொள்கை சீர்திருத்தங்களும் கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்துள்ளன என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு நிறுவனங்களை தற்சார்புடையதாகவும், வலிமையானதாகவும் மாற்றுவதே ‘கூட்டுறவின் மூலம் வளம்' என்ற தொலைநோக்குப் பார்வையின் நோக்கம் என்று பிரதமர் நரேந்திர மோடி இன்று குறிப்பிட்டுள்ளார். மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா எழுதிய கட்டுரை, நிர்வாக, கொள்கை சீர்திருத்தங்கள் கூட்டுறவுத் துறைக்கு எவ்வாறு புத்துயிர் அளித்துள்ளன என்பதை எடுத்துக்காட்டுகிறது என நரேந்திர மோடி கூறியுள்ளார்.
"கூட்டுறவுத் துறைக்கு புத்துயிர் அளித்த சீர்திருத்தங்கள்"
மத்திய உள்துறை, கூட்டுறவுத் துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட சமூக ஊடக எக்ஸ் தள பதிவுக்கு பதிலளிக்கும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது, "நிர்வாக சீர்திருத்தங்களும், கொள்கை சீர்திருத்தங்களும் கூட்டுறவுத் துறைக்கு எவ்வாறு புத்துயிர் அளித்துள்ளன என்பதை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சரான அமித் ஷா எடுத்துரைத்துள்ளார்.
Union Home Minister and Minister of Cooperation, Shri @AmitShah, highlights how administrative and policy reforms have rejuvenated the cooperative sector. He underscores that the vision of 'Sahkar Se Samriddhi' aims to make the cooperative institutions self-reliant and robust. https://t.co/kqQKX9hjRX
— PMO India (@PMOIndia) November 25, 2024
கூட்டுறவு நிறுவனங்களை தன்னம்பிக்கை கொண்டதாகவும், வலுவானதாகவும் மாற்றுவதை, ‘கூட்டுறவின் மூலம் வளம்’ என்ற தொலைநோக்குப் பார்வை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மத்திய கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா வெளியிட்ட பதிவில், "விளிம்புநிலை பிரிவினரை மேம்படுத்துவதற்காக கூட்டுறவுகளின் வளமான வரலாற்றை பாரதம் புதுப்பித்துள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2021ஆம் ஆண்டுதான், கூட்டுறவுத்துறைக்கு என மத்திய அரசால் தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது. நாட்டில் கூட்டுறவு இயக்கத்தை வலுப்படுத்த தனி நிர்வாக, சட்ட மற்றும் கொள்கை கட்டமைப்பை வழங்குவதே இந்த அமைச்சகத்தின் பொறுப்பாகும்.
இதையும் படிக்க: IND Vs AUS 1st Test: மிரட்டிய பும்ரா, சொந்த மண்ணில் ஆஸ்திரேலியா படுதோல்வி - பெர்த் டெஸ்டில் இந்தியா வரலாற்று வெற்றி