Startup: இந்தியா, உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட்-அப் சூழலுக்கான அமைப்பாக மாறியுள்ளது- மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களால், இந்திய இளைஞர்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய திறமைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்
இந்தியா, உலகின் 3வது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பாக மாறியுள்ளது என மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்
நாக்பூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியின் வருடாந்திர மின்-உச்சி மாநாட்டில் அமைச்சர் பியூஷ் கோயல் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா தொழில்நுட்பத்தின் மையமாக, உலகம் முழுவதும் மதிக்கப்படுகிறது. புதிய பாரதம் உலகிற்கு நட்புறவையும் கூட்டாண்மையையும் வழங்கி வருகிறது. நிலையான வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதை உறுதி செய்யும் வேளையில், உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும் பாதையில் இந்தியா இடைவிடாமல் பயணிக்கிறது.
இந்திய இளைஞர்கள் திறன்கள்:
உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் இந்தியர்களால், இந்திய இளைஞர்கள் உலகம் முழுவதும் மிகப்பெரிய திறமைகளையும் திறன்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர். தற்சார்பு இந்தியா பயணம் தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளால் இயக்கப்படுகிறது, இது இளைஞர்களை வேலை தேடுபவர்களை விட வேலைகளை உருவாக்குபவர்களாக மாற்றுகிறது. தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையில் பதிவு செய்யப்பட்ட 90,000-க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒரு மில்லியன் வேலைகளை உருவாக்கியுள்ளன.
Hon'ble Minister of Commerce & Industry, Shri @PiyushGoyal lauds GeM crossing Gross Merchandise Value of ₹2 lakh crore in 2022–23.
— Dept of Commerce, GoI (@DoC_GoI) April 1, 2023
Minister appeals for more manufacturers and suppliers to onboard on GeM
📰 https://t.co/G1CMbiiZnj pic.twitter.com/3IRzNauoYw
ஸ்டார்ட் அப்களில் பாலின சமத்துவம் உள்ளது என்றும் கிட்டத்தட்ட பாதி ஸ்டார்ட்அப்களில் பெண் இயக்குனர்கள் இருப்பதாகவும், பெண் தொழில்முனைவோர் பல வெற்றிகரமான ஸ்டார்ட்அப்களை வழிநடத்தி வருவதாகவும் பியூஸ் கோயல் தெரிவித்தார். ஸ்டார்ட்அப்கள் இந்தியாவை தொழில்நுட்பம் மற்றும் சிந்தனைக்கான தேசமாக மாற்றுகிறது
டிஜிட்டல் இணைப்பு நகரங்கள் மற்றும் கிராமங்களில் ஏற்படுத்துவதன் மூலம் உலகெங்கிலும் உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக திறமைகளின் தேவைக்கு ஏற்ப இந்திய இளைஞர்கள் வேலை செய்ய முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை
2022-23 நிதியாண்டில் இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி, 765 பில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவது குறிப்பிடத்தக்கது. உலகச் சூழ்நிலை மிகவும் சவாலானதாக இருக்கும் போதும் சரக்குகள் மற்றும் சேவைகள் இரண்டிலும் நமக்கு வளர்ச்சி உள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023 பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. தற்சார்பு இந்தியா ஒரு சக்திவாய்ந்த மற்றும் வலுவான தேசமாக உலகத்துடன் சமமாக ஈடுபட தயாராக உள்ளது என்றும் புதுமையான சிந்தனை காலத்தின் தேவை என்றும் அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்தார்.