என்ன வார்த்தை சொன்னார் ராகுல் காந்தி? கடுமையாக விமர்சித்த வெளியுறவுத்துறை அமைச்சர்.. நடந்தது என்ன?
இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் ராகுல் காந்தி "பிடாய்" என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டார் பகுதியில் இந்திய மற்றும் சீன ராணுவத்தினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் பின்னணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி "பிடாய் " என்ற வார்த்தையை பயன்படுத்தியதற்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று நாடாளுமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்தார்.
We've no problem with political criticism but we should not disrespect our jawans. I have heard that my own understanding needs to be deepened. When I see who is giving the advice I can only bow & respect. The word 'pitai' should not be used for our jawans: EAM Dr S Jaishankar https://t.co/6pH41dMREO pic.twitter.com/QbJjtIbps1
— ANI (@ANI) December 19, 2022
அருணாச்சல பிரதேசத்தில் சீனாவின் ஊடுருவல் குறித்து பிரதமர் மோடியை விமர்சித்த ராகுல் காந்தி, "ஹமாரே ஜவானன் கி பிடாய் ஹோ ரஹி ஹை (எங்கள் படையினர் தாக்கப்படுகிறார்கள்)" என்று கூறியதை சுட்டிக்காட்டி அமைச்சர் ஜெய்சங்கர் எதிர்ப்பு தெரிவித்தார். ”அரசியல் விமர்சனங்கள் இருந்தாலும், அரசியல் வேறுபாடுகள் இருந்தால் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. சில சமயங்களில் எனது சொந்த புரிதலை ஆழப்படுத்த வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நமது ஜவான்களை விமர்சிக்கக் கூடாது என்று நினைக்கிறேன். யாங்ட்சேயில் 13,000 அடி உயரத்தில் நின்று நமது எல்லையைக் காக்கும் நமது ஜவான்கள் 'பிடாய்' என்ற வார்த்தைக்கு தகுதியற்றவர்கள். 'பிடாய்' என்ற வார்த்தையை நமது வீரர்களை குறிப்பிட்டு பயன்படுத்தக்கூடாது" என்று ஜெய்சங்கர் கூறினார்.
ஜெய்ப்பூரில் நடந்த பாரத் ஜோடோ யாத்ராவின் போது பேசிய ராகுல் காந்தி, சீனாவின் அச்சுறுத்தலை அரசாங்கம் குறைத்து மதிப்பிடுவதாகக் குற்றம் சாட்டினார். அருணாச்சலப் பிரதேசத்தில் இந்திய ராணுவ வீரர்களை சீன வீரர்கள் தாக்குகிறார்கள் என்று அவர் கூறிய கருத்துக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அவரை காங்கிரஸ் கட்சியில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என பாஜக தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
"சீனா எங்கள் நிலத்தை கைப்பற்றியுள்ளது. அவர்கள் ராணுவ வீரர்களை அடித்து விரட்டுகிறார்கள். சீனாவின் அச்சுறுத்தல் தெளிவாக உள்ளது. அரசு அதை புறக்கணித்து. லடாக் மற்றும் அருணாச்சலத்தில் தாக்குதலுக்கு சீனா தயாராகி வருகிறது. இந்திய அரசு தூங்குகிறது என்ற ராகுல் காந்தியின் கருத்துக்கு ஜெய்சங்கர் சீனா பற்றிய தனது அறிவை விரிவுபடுத்த வேண்டும் என்று ராகுலின் அறிக்கைகள் காட்டுகின்றன என்றார்.
பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் கௌரவ் பாட்டியா, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே "ரிமோட் கண்ட்ரோல்" இல்லை என்றால், எதிர்க்கட்சிகள் நாட்டிற்கு ஆதரவாக இருந்தால், ராகுல் காந்தியின் கருத்துக்காக அவரை கட்சி விட்டு நீக்க வேண்டும் என குறிப்பிட்டார்.