பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க நினைக்கிறீங்களா? : 3 நாள்கள் கஷ்டம்.. உடனே ஓடுங்க!
இன்று இரவு 8 மணியிலிருந்து 3 நாள்கள் வரை பாஸ்போர்ட் சேவை வலைத்தளம் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்ப பராமரிப்பு பணிகள் காரணமாக பாஸ்போர்ட் சேவை வலைத்தளம் (www.passportindia.gov.in) இன்று (செப்டம்பர் 20ஆம் தேதி) இரவு 8 மணியிலிருந்து செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, விண்ணப்பதாரர்கள் இந்த பராமரிப்பு காலத்திற்குப் பின்னர் தளத்தை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர் என்று சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் ஏன் முக்கியம்?
ஆகையால், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க திட்டமிட்டிருந்தவர்கள் இந்த 3 நாட்கள் செயல்படாது என்பதால், மிகவும் அவசரமாக விண்ணப்பிக்க விரும்பினால் இன்று இரவு 8 மணிக்குள் விண்ணப்பித்து கொள்ளவும்.
மேலும், பொது தகவல் பெற வேண்டியோ அல்லது சந்தேகத்தின் காரணமாக சென்னை அலுவலகம் செல்ல நினைத்திருப்பவர்கள் நாளை செல்ல வேண்டாம் என்றும், அன்றைய நாள் அலுவலகம் மூடப்பட்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகையால், இந்த தகவலை பாஸ்போர்ட் விண்ணப்பித்திருப்பவர்கள் மற்றும் விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கு அனுப்பி தகவலை தெரிவியுங்கள். வெளிநாட்டு பயணத்தின் போது பாஸ்போர்ட் மற்றும் விசா ஆகியவை மிக முக்கியமான ஆவணங்களாகும்.
பாஸ்போர்ட் சேவை வலைத்தளம் இயங்காது:
பாஸ்போர்ட் என்பது வெளிநாட்டு அதிகாரிகளுக்காக இந்திய அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உங்களின் அடையாளமாகும். விசா உங்கள் வருகையின் நோக்கம் மற்றும் கால அளவைக் குறிக்கிறது. இந்த ஆவணங்கள் சட்டச் சிக்கல்கள் ஏதுமின்றி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள உத்தரவாதம் அளிக்கின்றன.
Advisory - Passport Seva portal will be unavailable from 2000 hrs (20.9.2024) till 0600 hrs (23.9.2024) due to technical maintenance. pic.twitter.com/j7cOjG4442
— PassportSeva Support (@passportsevamea) September 20, 2024
இந்த நிலையில், பாஸ்போர்ட் சேவை வலைத்தளம் (www.passportindia.gov.in) இன்று (செப்டம்பர் 20ஆம் தேதி) இரவு 8 மணியிலிருந்து செப்டம்பர் 23ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாஸ்போர்ட் பெற நினைப்பவர்கள், அல்லது விண்ணப்பிக்க நினைப்பவர்கள் இன்று இரவு 8 மணிக்குள் பாஸ்போர்ட் சேவை வலைத்தளத்தை பயன்படுத்துமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
இதையும் படிக்க: Blue Aadhaar Card: நீல நிற ஆதார் அட்டை யாருக்கானது? வெள்ளை ஆதாரிலிருந்து எப்படி மாறுபடுகிறது? விவரங்கள் இதோ..!