Blood Donation : உயிரை காக்கும் உன்னத சேவை.. ஒரே நாளில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ரத்த தானம்...உலக சாதனை படைத்த இந்தியா
ரக்தன் அம்ரித் மஹோத்சவ் இயக்கத்தின் கீழ் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளது.
ரக்தன் அம்ரித் மஹோத்சவ் இயக்கத்தின் கீழ் ரத்த தானம் செய்த தன்னார்வலர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா சனிக்கிழமை அன்று தெரிவித்தார்.
1,00,000 पार….#RaktdaanAmritMahotsav https://t.co/JgTH7o3PIP pic.twitter.com/kpi9GFLixr
— Dr Mansukh Mandaviya (@mansukhmandviya) September 17, 2022
தனது பழைய ட்வீட் ஒன்றை மேற்கோள் காட்டி, ரத்த தானம் செய்தோரின் எண்ணிக்கை 1,00,000 தாண்டியதாக மாண்டவியா ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக சனிக்கிழமையன்று, சுகாதார அமைச்சகத்தின் அலுவலர்கள், 2014 ஆம் ஆண்டில் 87,059 பேர் ரத்த தானம் செய்ததாகவும் தற்போது அதை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர்.
ரக்தன் அம்ரித் மஹோத்சவ் என்பது நாடு தழுவிய மெகா தன்னார்வ ரத்த தான இயக்கமாகும். இது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாவால் சனிக்கிழமையன்று டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் ரத்த தானம் செய்யும் முகாமில் ரத்த தானம் செய்ததன் மூலம் தொடங்கப்பட்டது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "இந்த நாடு தழுவிய இயக்கத்தின் மற்றொரு குறிப்பிடத்தக்க அம்சமாக, இந்த மெகா இயக்கத்திற்காக 6,112 முகாம்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், 2.07 லட்சத்திற்கும் அதிகமானோர் ரத்த தானம் செய்வதற்காக இதுவரை E-Rakt Kosh போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர்.
அனைவருக்கும் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மற்றொரு நடவடிக்கையாக, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி, 2025 ஆம் ஆண்டுக்குள் காசநோயை ஒழிக்க 'பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான்' திட்டத்தை தொடங்கினார்.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "பிரதான் மந்திரி காசநோய் முக்த் பாரத் அபியான் திட்டம் என்பது குடிமக்களை மையமாகக் கொண்ட பிரதமர் கொள்கைகளின் விரிவாக்கம். குணப்படுத்தக்கூடிய நோயான காசநோய்க்கான சிகிச்சை குறித்த மேம்பட்ட விழிப்புணர்வை உறுதி செய்வதில் முக்கிய படியாகும். அரசு மருத்துவமனைகளில் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த முயற்சி வேகம் பெற்றுள்ளது. இதுவரை சுமார் 13.5 லட்சம் காசநோய் நோயாளிகள் நிக்ஷய் போர்ட்டலில் பதிவு செய்துள்ளனர். காசநோயாளிகளின் சிகிச்சையை மேம்படுத்த Ni-kshay 2.0 போர்ட்டல் கூடுதல் ஆதரவை வழங்குகிறது.
2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை சந்திப்பதில் சமூக ஈடுபாட்டை அதிகரிக்கிறது.