திடீரென பற்றி எரிந்த ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்: வைரலான வீடியோ - காரணம் என்ன?
கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், இது மற்ற ஸ்கூட்டர்களைவிட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது.
புனே நகரில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஏற்படுத்தியதோடு, அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிவருகிறது. இந்நிலையில் தான் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்திவருவதாக ஓலா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைக்கு எந்தளவிற்கு தொழில்நுட்பங்கள் அதிகரித்துவருகிறதோ? அதற்கேற்றால் பல இணையதள சாதனங்களும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக கடந்த ஆண்டு ஓலா நிறுவனம் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றை ரூ.499 செலுத்தி முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும், இது மற்ற ஸ்கூட்டர்களைவிட பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் உள்ளதாகவும் தெரிவித்திருந்தது. இதனையடுத்து நாடு முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான முன்பதிவு செய்த நிலையில், சமீபத்தில் அந்நிறுவனம் எலக்ட்ரிக் வாகன விற்பனையைத் தொடங்கியது.
தற்போது அதிகரித்துவரும் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு மத்தியில் ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக விளங்கிவந்தது. மக்கள் பலரும் மகிழ்ச்சியில் இதனை உபயோகித்துவந்த நிலையில் தான், சமீபத்தில் துர்திஷ்டவசமாக புனே நகரில் ஓலா ஸ்கூட்டர் ஒன்று தீப்பற்றி எரிந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. புனே நகரில் வணிக வளாகத்திற்கு வெளியே நிறுத்தி வைத்தப்போது தீப்பற்றி எரித்ததால் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த வீடீயோ இணையத்தில் தீப்பற்றி எரிந்துவருகிறது.
இதோடு இணையத்தில் வீடியோவைப்பார்த்ததோடு மட்டுமில்லாமல், ஷேர் செய்தும் வருகின்றனர். இந்நிலையில் தான் ஓலா நிறுவனம் மற்றும் ஓலா இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி இவ்விவகாரம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாகி அதிகாரி பவிஷ் அகர்வால் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவீட்டில், வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு தான் மிகவும் முதன்மையானது எனவும், தீப்பற்றி விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், விரைவில் இப்பிரச்சனை சரிசெய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Ola scooter in flames highlights safety issues with batteries. NMC cells more prone to ‘Thermal Runaway’ or spontaneous fires than LFP cells. @OlaElectric must investigate & give us answers. Thank God no one injured and # burnol not needed! pic.twitter.com/kupn2fANTP
— Hormazd Sorabjee (@hormazdsorabjee) March 26, 2022
Safety is top priority. We’re investigating this and will fix it. https://t.co/HsTFh4cbhw
— Bhavish Aggarwal (@bhash) March 26, 2022
மேலும், ஓலா நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில், புனே நகரில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்த விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், என்ன காரணம் என்பது குறித்து விசாரணை செய்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர். துர்திஷ்டவசமான இந்த சம்பவத்தில் ,சம்பந்தப்பட்ட வாடிக்கையாளர் பாதுகாப்பாக தான் உள்ளார் எனவும் இந்த விபத்திற்கான மூல காரணம் என்ன குறித்து விசாரணை நடத்திவரும் நிலையில் அடுத்த சில நாள்களில் புதிய தகவல்களை வெளியிடுவோம் எனவும் டிவிட்டர் பதிவிட்டுள்ளனர்.
EVs are notorious for having extremely long development times. This is not to improve efficiencies but also for QC & testing
— Suhas Rajkumar (@suhasrajkumar) March 26, 2022
It's a new technology that most are still figuring and perfecting
If someone boasts record development time, it's not necessarily a good thing #SafetyFirst
இந்த தீ விபத்து சம்பவம் குறித்து பொதுக்களும் பல்வேறு டிவிட்டர் பதிவுகளை பதிவிட்டுவரும் நிலையில், Simple Energy நிறுவனத்தின் சிஇஓ சுகஷ் ராஜ்குமாரில் தனது டிவிட்டர் பக்கத்தில், EVகள் மிக நீண்ட வளர்ச்சி காலங்களைக் கொண்டிருப்பதற்கு இழிவானவை எனவும் புதிய தொழில்நுட்பம், பெரும்பாலானவர்கள் இன்னும் கண்டுபிடித்து முழுமையாக்குகிறார்கள். சாதனை வளர்ச்சி நேரத்தை யாராவது பெருமையாகக் கூறினால், அது ஒரு நல்ல விஷயம் அல்ல என்றும் மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் எனவும் தெரிவித்துள்ளார்.