Watch Video | கிணற்றில் தவறி விழுந்த யானைக் குட்டி: ஆத்திரத்தில் பேருந்தை தாக்கிய தாய் யானை!
அந்தக் கூட்டத்தில் இருந்த யானைக் குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் யானைக்கூட்டமே பிளிறல் சத்தமிட்டு கிராமத்தினரை அலற வைத்தது.
தன்னுடைய குட்டி கிணற்றுக்குள் விழுந்ததால் ஆத்திரம் அடைந்த காட்டு யானை அங்கு சாலையில் நின்ற பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது. யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அம்மாவட்டத்தில் உள்ள ராசகோவிந்தபுர் வனப்பகுதியில் யானைகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. சில நேரங்களில் அந்த யானைக்குட்டம் அருகில் உள்ள கிராமத்துக்கு வருவதும் உண்டு. அப்படியாக காட்டு யானைகள் கூட்டம் அருகில் உள்ள கிராமத்துக்குள் நுழைந்தது.
Angry tusker attacks passenger bus in Odisha's Mayurbhanj district on Sunday morning. Passengers had a miraculous escape. pic.twitter.com/683IlLZf0B
— 𝓓𝓮𝓫𝓪𝓫𝓻𝓪𝓽𝓪 𝓜𝓸𝓱𝓪𝓷𝓽𝔂 (@debabrata2008) January 10, 2022
அந்தக் கூட்டத்தில் இருந்த யானைக் குட்டி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுந்தது. இதனால் யானைக்கூட்டமே பிளிறல் சத்தமிட்டு கிராமத்தினரை அலற வைத்தது. ஆத்திரத்தில் யானைக் கூட்டம் அங்கும் இங்கும் ஓடின. அப்போது அவ்வழியில் பயணிகள் பேருந்தை பலமாக தள்ளித் தாக்கத் தொடங்கியது. யானையின் ஆத்திரத்தை தெரிந்துகொண்ட ஓட்டுநர் பேருந்தை வேகமாக இயக்கியதால் பயணிகள் நூலிழையில் உயிர் தப்பினர்.
இதற்கிடையே யானைக்குட்டி தொடர்பாக வனத்துறையினருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத்துறையினர் 5 மணி நேர போராட்டத்துக்குபின் யானைக் குட்டியை மீட்டனர்.
#Elephant calf rescued successfully from a dry dug-well in Chakundapada village of #Rasgovindpur Forest Range. Now the calf reunited with the herd,we are closely monitoring Special thanks to @OdishaFS_HGs_CD & @spmayurbhanj for assisting Forest Dept in #wildRescue @PCCFWL_Odisha pic.twitter.com/ATMzyyvXbI
— DFO Baripada (T) (@BaripadaT) January 9, 2022
இது குறித்து தெரிவித்த உள்ளூர்வாசி ஒருவர், '' திடீரென கோபமான யானை அங்கிருந்த பேருந்து பக்கமாக சென்று தாக்கத் தொடங்கியது. பேருந்து ஜன்னலை உடைத்தது. நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். நல்லவேளையாக யாருக்கும் பாதிப்பு இல்லை" என்றார்
யானைக்குட்டியை மீட்டது குறித்து பேசிய தீயணைப்புத்துறையினர், '' கிணறு 5 அடிதான் என்றாலும் தண்ணீர் இல்லை. அதனால் அருகில் உள்ள குட்டையில் இருந்து தண்ணீரை எடுத்து கிணற்றில் நிரப்பினோம். நீரில் யானைக்குட்டி நீந்தி கொண்டே மேலே வந்தது” என்றார்.
யானைக் குட்டியை கண்டதும் யானைக் கூட்டமே மகிழ்ச்சியில் பிளிறி சத்தமிட்டன. இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்