ஆசிரியர் கொடுத்த தண்டனை.. கட்டாயப்படுத்தியதால் உயிரிழந்த சிறுவன்: ஒடிஷாவில் சோகம்
பள்ளியில் கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒடிசாவின் ஜாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவனை கட்டாயப்படுத்தி ஆசிரியர் தோப்புக்கரணம் போட வைத்ததாகக் கூறப்படுகிறது. கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததால் அந்த சிறுவன் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசா பள்ளியில் பரபரப்பு:
உயிரிழந்த சிறுவன் ருத்ர நாராயண் சேத்தி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர், ஓரலியில் உள்ள சூர்ய நாராயண் நோடல் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்துள்ளார். நேற்று முன் தினம் மதியம் 3 மணியளவில் வகுப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது, சக மாணவர்களுடன் பள்ளி வளாகத்தில் சேத்தி விளையாடிக் கொண்டிருந்தான்.
இதையும் படிக்க: உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்து: ”செய்திகளை வழங்கும்போது கவனமாக இருங்கள்” - ஊடகங்களுக்கு மத்திய அரசு அட்வைஸ்!
இதை பார்த்த ஆசிரியர், தண்டனையாக தோப்புக்கரணம் போட உத்தரவிட்டார். ஆனால், அதற்கு சிறுவன் மறுப்பு தெரிவித்துள்ளாள். கட்டாயப்படுத்தி சிறுவனை சேத்தியை தோப்புக்கரணம் போட வைத்துள்ளார் ஆசிரியர். இதில், சேத்தி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார்.
ரசூல்பூர் ஓரலி கிராமத்தில் வசிக்கும் அவரது பெற்றோருக்கு இந்த சம்பவம் குறித்து உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக, அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சிறுவனை ஆசிரியரும் பெற்றோரும் தூக்கி சென்றுள்ளனர். அங்கிருந்து சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு சொல்லப்பட்டுள்ளார். இறுதியாக, செவ்வாய் இரவு கட்டாக்கில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
தோப்புக்கரணம் போட வைத்ததால் நிலைகுலைந்த சிறுவன்:
சிறுவனை கட்டாயப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்ததும் அதில் நிலைகுலைந்த சிறுவன் உயிரிழந்திருப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரசூல்பூர் மண்டல கல்வி அதிகாரி (பிஇஓ) நிலம்பர் மிஸ்ராவை தொடர்பு கொண்டபோது, "எனக்கு இதுவரை முறையான புகார் எதுவும் வரவில்லை" என்றார்.
"முறையான புகார் கிடைத்தால் விசாரணை நடத்தி குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்" என தெரிவித்துள்ளார். ரசூல்பூர் மண்டல் கல்வி அதிகாரி பிரவஞ்சன் பாடி பள்ளிக்கு சென்று சம்பவம் குறித்து விசாரணை நடத்தியுள்ளார்.
இதையும் படிக்க: Accident: மின்னல் வேகத்தில் வந்த ஆட்டோ! லாரி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட பள்ளிக்குழந்தைகள் - ஆந்திராவில் சோகம்