திருமணமான புதிய தம்பதிகளுக்கு ஆணுறை! மாத்திரை - அரசின் அதிரடி அறிவிப்பு
திருமணமான புதுமண தம்பதிகளுக்கு மாநில அரசு புதிய கிட் ஒன்றை வழங்க உள்ளது.
மத்திய அரசு பல்வேறு நல திட்டங்களை அறிவித்து வந்தாலும் அந்தத் திட்டங்களை மாநிலங்கள் செயல்படுத்து வருவது வழக்கம். அந்தவகையில் மத்திய அரசின் திட்டம் ஒன்றுக்கு ஒடிசா அரசு ஒரு புதிய செயல்படுத்தும் முறையை அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலம் புதிதாக திருமணம் நடக்கும் தம்பதிகளுக்கு சில விஷயங்கள் அடங்கிய கிட் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய அரசின் பரிவார் விகாஸ் என்ற திட்டத்தின் கீழ் ஒடிசா அரசு நயி பஹால் அல்லது நபடாம்டி கிட் என்ற கிட் ஒன்றை அளிக்க உள்ளது. இந்தக் கிட்டின் மூலம் ஒடிசா அரசு புதுமண தம்பதிகள் இடம் பாதுகாப்பான உடலுறவு, குடும்ப கட்டுப்பாடு மற்றும் குழந்தை பிறப்பிற்கு இடையேயான இடைவெளி ஆகியவை தொடர்பாக விழிப்புணர்வு செய்ய உள்ளது. அந்தவகையில் இந்த கிட்டை அமைத்துள்ளது.
The main objective of ‘Mission Parivar Vikas’ is to accelerate access to quality #FamilyPlanning choices based on information, reliable services and supplies within a rights-based framework. #WorldPopulationDay #SwasthaBharat #HealthForAll pic.twitter.com/XoIN5qAOHe
— Ministry of Health (@MoHFW_INDIA) July 11, 2020
ஒடிசா அரசு கொடுக்க இருக்கும் இந்த கிட்டில் இரண்டு டவல், நகம் வெட்டி, கண்ணாடி, சீப்பு, ஆணுறை, மாத்திரைகள் ஆகியவை இடம்பெற உள்ளன. இவற்றுடன் சேர்ந்து தம்பதியின் திருமண சான்றிதழும் உடன் வழங்கப்பட உள்ளது. இந்தப் புதிய அறிவிப்பு தொடர்பாக ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் பிஜெய் பங்க்ரானி கருத்து தெரிவித்துள்ளார்.
அதன்படி, “ஒடிசா மாநில அரசு குடும்ப கட்டுப்பாடு திட்டம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த புதிய கிட்டை தம்பதிகளுக்கு அளிக்க உள்ளது. இந்தத் திட்டம் புதுமண தம்பதிகள் நேரடியாக கொண்டு சேர்க்கப்படும். இது கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் அமல்படுத்தப்படும்” எனத் தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் வரும் செப்டம்பர் மாதம் முதல் ஒடிசாவில் அமல்படுத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மக்கள் தொகையில் அடுத்த வருடம் சீனாவை முந்தும் இந்தியா: ஐநா
இந்தியாவின் மக்கள் தொகை தொடர்பாக கடந்த ஜூலை மாதம் ஐநா ஒரு தரவு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் 2027ஆண்டிற்கு பதிலாக இந்தியா வரும் 2023ஆம் ஆண்டே மக்கள் தொகையில் சீனாவை முந்திவிடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் மக்கள் தொகை வேகமாக அதிகரிக்கும் நாடுகள் பட்டியலில் இந்தியா, காங்கோ, எகிப்து, எத்தோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் தான்ஜானியா உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்று இருந்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்