Crime : 12 பேர் இணைந்து ராக்கிங்..! மாணவியை மிரட்டி முத்தமிட்ட மாணவன்..! ஒடிசாவில் கொடூரம்..
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவரை 12 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவரை 12 மாணவர்கள் சேர்ந்து ராகிங் செய்யும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது.
ஒடிசா மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில் மாணவி ஒருவரை மாணவன் ராக்கிங் செய்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வந்துள்ளது. ஒடிசா மாநிலத்தில் பெர்காம்பூர் பஜார் ஆச்சார்யா கல்லூரியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அந்த வீடியோவில் கல்லூரி மாணவர்கள் சிலர் ஒரு மாணவியை ராகிங் செய்கின்றனர். ஐ லவ் யூ எனக் கூறி மாணவியை வலுக்கட்டாயமாக முத்தமிடுகின்றனர். அந்த இடத்தை விட்டு மாணவி வெளியேற முயலும்போது, பிளாஸ்டிக் பைப்பால் அடிப்பதாக மிரட்டல் விடுக்கப்படுகிறது.
அந்த இடத்தை சுற்றிலும் நின்று மாணவ, மாணவிகள் வேடிக்கை பார்க்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
12 பேர் ராகிங் :
விசாரணையில் ராகிங் செய்த அந்த மாணவன் ஹர்தக்ந்தியில் உள்ள சாந்தி நகரைச் சேர்ந்த அபிஷேக் நஹத் என்பது தெரியவந்தது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட மாணவர்கள் 12 பேரை கல்லூரியில் இருந்த வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என போலீசார் தெரிவித்தனர்.
குறிப்பாக மாணவியை ராகிங் செய்ததாக 2 கல்லூரி மாணவர்கள் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவர் குறித்து போலீசார் கூறியதாவது, இது ராகிங் வழக்கு மட்டுமல்ல, பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் தொந்தரவு செய்ததாகவும் கருதப்படுகிறது என்று கூறினார்.
போக்சோ :
ராகிங்கின் கீழ் உள்ள பிரிவுகளைத் தவிர, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என தெரிவித்தார். ராகிங் தங்களுக்கு நடந்தால் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் 112 என்ற எண்ணை அழைக்கலாம் இல்லையென்றால் அருகில் இருக்கும் காவல்நிலையத்திற்கு புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.
சட்டங்கள் கடுமையாக இருந்தாலும் அதை பலர் மதிப்பதில்லை என்பதையே இந்த சம்பவம் காட்டுகிறது. சிலர் இதுபோன்ற சம்பவத்தில் இன்னும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கல்லூரிக்கு படிக்க வரும் மாணவிகள் பெரும் துயரத்திற்கு ஆளாகுகின்றனர். கல்லூரிக்கு சென்ற இடத்தில் மாணவிக்கு நேர்ந்த இந்த கொடூர சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.