மேலும் அறிய

ஐஐடி ட்ராப்-அவுட்தான்.. ஆனால் அத்தனை பேரும் கில்லாடி வெற்றியாளர்கள்.. யார் இந்த 5 பேர்?

இந்தியாவின் பல முன்னனி முக்கியப் பிரமுகர்கள் ஐஐடியில் உருவானவர்கள். அதிலும் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியவர்கள்...

ஐஐடி பல முக்கியப் புள்ளிகளை உருவாக்கி இருக்கிறது.இந்தியாவின் பல முன்னனி முக்கியப் பிரமுகர்கள் ஐஐடியில் உருவானவர்கள். அதிலும் அங்கிருந்து பாதியிலேயே வெளியேறியவர்கள். அவர்களின் பட்டியல் இதோ...

முகேஷ் அம்பானி

இந்தியாவின் முன்னணிப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் ஐஐடியில் படித்தவர் என்றால் அது அதிர்ச்சி அளிப்பதாக இருக்கும். ஆம், ஐஐடி-ஜேஇஇ தேர்வில் பங்கேற்று தேர்ச்சி அடைந்தவுடன் ஐஐடி பாம்பேயில் சேர்ந்தார். ஆனால் அவர் கெமிக்கல் இன்ஜினியரிங் தொடர விரும்பியதால் IIT-Bஐ விட்டு ICTல் சேர்ந்தார்.

பிரசாந்த் பூஷண்

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியைப் பற்றி விமர்சன ட்வீட்களை ட்வீட் செய்ததற்காக அவர் செலுத்த வேண்டிய அபராதத்தின் காரணமாக பிரசாந்த் பூஷன் பிரபலமானார். அவர் ஆரம்பத்தில் ஐஐடி-மெட்ராஸில் தனது பட்டப்படிப்பைத் தொடங்கினார். ஆனால் ஒரு செமஸ்டருக்குப் பிறகு அங்கிருந்து வெளியேறினார். பின்னர் இரண்டு ஆண்டுகள் பிஎஸ்சி படிப்பைத் தொடர்ந்தார். அவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் இந்தப் படிப்பைத் தொடர்ந்தார், அதன்பிறகு அந்தப் படிப்பையும் விட்டுவிட்டு அவர் தாயகம் திரும்பினார்.

அதன் பிறகு 1983 இல், அவர் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். இப்போது 500க்கும் மேற்பட்ட பொதுநல வழக்குகளைத் தொடர்ந்துள்ளார்.

வினோத் ராய்

ஐஐடியில் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், அந்த படிப்பிலேயே சேரவில்லை. மாறாக டெல்லி பல்கலைக்கழகத்தில் பொருளாதாரம் படித்து முதுகலைப் பட்டம் பெற்று தேர்ச்சி பெற்றார்

ஷாஷ்வத் நக்ரானி

2018ல், ஷஷ்வத், அஷ்னீர் குரோவருடன் இணைந்து பாரத்பே என்ற செயலியை நிறுவினார். 2015 ஆம் ஆண்டில் அவர் ஐஐடி டெல்லியில் சேர்க்கை பெற்றார், ஆனால் இந்த இறுதி ஆண்டில் அவர் வெளியேறினார். இப்போது ஐஐஎஃப்எல் வெல்த் ஹுருன் இந்தியா பணக்காரர்கள் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இளைஞர் என்கிற பெருமைக்கு உரியவர்.

View this post on Instagram
 
A post shared by Narayana Murthy (@narayanamurthy.official)

நாராயண மூர்த்தி

 இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி ஐஐடிக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றார். நாராயண மூர்த்திக்கு தனது தந்தைக்கு கட்டணச்சுமை ஏற்படுத்தக் கூடாது என்கிற எண்ணம். அதனால் அவர் வேறு எதிலும் சேரவில்லை. அதனால் தேசிய பொறியியல் நிறுவனத்தில் பட்டப்படிப்பை முடித்தார். மேலும் தனது முதுகலைப் படிப்பிற்காக, அவர் ஐஐடி கான்பூர் சென்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Transgender Issue | ”9-ஆடா நாங்க?...இன்னும் எத்தனை நாளைக்கு..” SURRENDER ஆன தவெக! | Vijayதிமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்! ஆட்டத்தை தொடங்கிய PK! குஷியில் EPS, விஜய்அந்தர்பல்டி அடித்த மம்தா!ராகுல் காந்திக்கு செக்!உடைகிறதா கூட்டணி?Karthi Visit Tirupati | லட்டு சர்ச்சை விவகாரம் திருப்பதி சென்ற கார்த்தி”என் மகன் தான் காரணம்”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Senthil Balaji Case: செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கனுமா? உச்சநீதிமன்றம் சராமரி கேள்வி?
Trump on GAZA Again: விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விலை கொடுத்து வாங்குறதா..? அப்படியே எடுத்துக்க வேண்டியதுதான்.. ட்ரம்ப் மீண்டும் சர்ச்சை...
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
விசிக நிர்வாகி தாக்கியதாக நாடகமாடிய பெண் எஸ்.ஐ., பணியிடை நீக்கம்
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
Shubman Gill Century: குட்டி ரன்மெஷின்டா! மிரட்டல் சதம் போட்ட சுப்மன்! இங்கிலாந்தை கொல்லும் GILL!
CV Shanmugam Slams EC: அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
அவங்க வெறும் குமாஸ்தா தான்... தேர்தல் ஆணையத்தையே சீண்டிய சி.வி. சண்முகம்...
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும்  11 படங்கள்
Valentines Day Movie Release : காதலர் தினத்தன்று திரையரங்கில் வெளியாகும் 11 படங்கள்
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
Seeman on Vijay : “பணக் கொழுப்பு” விஜய் பற்றிய கேள்விக்கு சீமான் பரபரப்பு கருத்து..!
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
TVK Vijay: அப்ப இனிச்சது, இப்ப கசக்குதா? விஜய் திட்டத்தை அட்டாக் செய்யும் பாஜக, திமுக - பழச மறந்துட்டீங்களா?
Embed widget