கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு இல்லையா..கேரள அரசுக்கு பறந்த நோட்டீஸ்!
கேரள சிறைகளில் கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் இல்லாதது குறித்த பிரச்னையை தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.

கேரள சிறைகளில் கைதிகள் கல்வி கற்கத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனிதவளம் இல்லாதது குறித்து ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து கவனத்தில் கொண்டுள்ளது. கடுமையான குற்றங்களில் ஈடுபட்டவர்கள் உட்பட கைதிகள், வழக்கமான அல்லது ஆன்லைன் கல்விப் படிப்புகளில் சேருவதன் மூலம் தங்கள் வாழ்க்கையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால் அதிகாரிகள் அவர்களின் முயற்சிகளை ஆதரிக்கத் தயங்குவதாக கூறப்படுகிறது.
இந்த தகவல் உண்மையாக இருந்தால், இது கல்வித் திட்டங்கள்/படிப்புகளைத் தொடர விரும்பும் கைதிகளின் மனித உரிமைகள் மீறல் தொடர்பான பிரச்சினை என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையமானது கவனத்தில் கொண்டுள்ளது.
இதையடுத்து, கேரள அரசின் சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநருக்கு ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கேரள சிறைச்சாலையில் கேரள சிறை அதிகாரிகள், கடுமையான பணியாளர் பற்றாக்குறை, பிரத்யேக சாதனங்கள் இல்லாதது மற்றும் ஆன்லைனில் படிக்க விரும்பும் கைதிகளுக்கு பாதுகாப்பான இணைய இணைப்பு இல்லாதது ஆகியவற்றை எதிர்கொள்வதாக கூறப்படுகிறது. கைதிகள் கல்வி நோக்கங்களுக்காக மட்டுமே இணையத்தைப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு அமைப்பு எதுவும் இல்லை என்று கூறப்படுகிறது.
இதில் பிற சவாலும் உள்ளதாகத் கூறப்படுகிறது, அதாவது சிறையிலிருந்து வெளியேறுவதற்கான இடைக்கால விடுதலையைப் பெறுவதற்கான ஒரு தந்திரமாக, சில ஆபத்தான குற்றவாளிகளும் இப்போது வழக்கமான பாடநெறிக்கு விண்ணப்பிக்க முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.
கேரள அரசின் சிறைச்சாலைகளின் தலைமை இயக்குநருக்கு ஆணையம் ஒரு நோட்டீஸ் அனுப்பி, இந்த விவகாரம் குறித்து நான்கு வாரங்களுக்குள் விரிவான அறிக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது, கவனத்தை ஈர்த்துள்ளது.





















