தீபாவளிக்குத் தயாராகும் நகரம்.. மாசுபாட்டை இப்படி சமாளிக்கலாமா? அரசு அறிவித்திருக்கும் புதிய செயல்திட்டம்!
கார்பன் வெளியேற்ற விதிமீறல்களை கண்காணித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஏற்ப புகார்கள் மற்றும் குறைகளை இந்தத் திட்டம் நிவர்த்தி செய்யும்.
தேசிய தலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நிலவும் காற்று மாசுபாட்டின் சூழ்நிலையின் தீவிரத்திற்கு ஏற்ப நுட்பமான தரப்படுத்தப்பட்ட புதிய செயல் திட்டம் தொகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இது அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.மேலும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த ஆண்டு முன்கூட்டியே இந்த நடவடிக்கை செயல்படுத்தப்படுவதால் கடுமையான மாசுபாட்டின் நிகழ்வு குறைவாக இருக்கும் என நம்புகின்றனர். முன்னதாக, இந்தத் திட்டம் அக்டோபர் 15 முதல் நடைமுறைக்கு வரும் எனச் சொல்லப்பட்டது.
டெல்லி-NCR இல் காற்றின் தரத்தை நிர்வகிப்பதற்கு ஆகஸ்ட் 2021 இல் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பானது காற்றின் தர மேலாண்மைக்கான ஆணையம், பொதுமக்கள் மற்றும் நிபுணர்களின் முன்கூட்டிய நடவடிக்கை காற்றின் தரம் கடுமையாக மோசமடைவதைத் தடுக்கும் என்கிற அடிப்படையிலான ஆலோசனைகளைக் கருத்தில் கொண்டு, GRAPஐ முன்கூட்டியே செயல்படுத்த முடிவு செய்தது.
திருத்தப்பட்ட இந்தத் திட்டத்தின் இன் கீழ், முன்னறிவிப்புகளின் அடிப்படையில் மூன்று நாட்களுக்கு முன்னதாகவே மாசுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்.
முன்னதாக, காற்றின் அளவீடான PM2.5 மற்றும் PM10 செறிவு ஒரு குறிப்பிட்ட எல்லையைத் தொட்ட பின்னரே அதிகாரிகள் நடவடிக்கைகளைச் செயல்படுத்துவார்கள்.
இம்முறை புதிய கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படுவது PM2.5 மற்றும் PM10 செறிவு எண்ணைக் காட்டிலும் காற்றின் தரக் குறியீடு (AQI) மதிப்புகளின் அடிப்படையில் இருக்கும்.
விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் சுத்தமான காற்று திட்டத்தின் மூத்த திட்ட மேலாளர் விவேக் சட்டோபாத்யாயா கூறுகையில்: "வானிலை நிலைமைகள் மிகவும் சாதகமற்றதாக இருக்கும் சூழலில், காற்றின் தரம் திடீரென மோசமடைவதை முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும்."
"அவசர நடவடிக்கைகள் தேவைப்படாமல் இருக்க ஏஜென்சிகள் தங்கள் அடிப்படை நடவடிக்கைகளை வலுப்படுத்த வேண்டும். அவர்கள் ஒரு தற்செயல் நிகழ்வை முன்னறிவித்து, அதைச் சமாளிக்க ஒரு சுமாரான திட்டத்தைத் தயாரிக்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
ஆற்றல் மற்றும் சுத்தமான காற்றுக்கான ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளர் சுனில் தஹியா, முன்கூட்டிய நடவடிக்கையானது கடுமையான காற்றின் தரத்தின் குறைவான நிகழ்வுகளுக்கு வழிவகுக்கும் என்று நம்புகிறார்.
"இருப்பினும், நீடித்த விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களுடைய தொடர்ச்சியான ஈடுபாடு மட்டுமே பல பிரச்சனைகளை தீர்க்கும்.” என்று அவர் கூறினார்.
டெல்லியில், சுற்றுச்சூழல் துறை புதிய ரியல்டைம் பகிர்வு முறையைப் பயன்படுத்துகிறது, இது அனைத்து மாசு மூலங்களின் பங்களிப்பையும் உண்மையான நேரத்தில் கண்டறிய உதவும்.
கார்பன் வெளியேற்ற விதிமீறல்களை கண்காணித்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக பின்பற்றப்படும் நடைமுறைக்கு ஏற்ப புகார்கள் மற்றும் குறைகளை இந்தத் திட்டம் நிவர்த்தி செய்யும்.
பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தின் பண்ணை பொறியியல் துறைத் தலைவர் மகேஷ் நரங் கூறுகையில், இந்த நுட்பமான சட்டம் மற்றும் முன்னெச்சரிக்கை தடைகள், கடந்த ஆண்டு தீபாவளி மற்றும் அதற்கு அடுத்த நாட்களில் காணப்பட்ட காற்றின் தர நெருக்கடி மீண்டும் நிகழாமல் இருக்க உதவும் என்றார்.
"நவம்பர் மற்றும் அக்டோபர் 24-ம் தேதிகளில் தீபாவளி ஆகிய நாட்களில் இது ஒரு முக்கியமான காரணியாகும். எனவே, மற்ற எல்லா நடவடிக்கைகளையும் கண்டிப்பாகப் பின்பற்றினால், தீபாவளியன்று இது கடுமையான காற்றுமாசுபாட்டு சூழ்நிலைக்கு வழிவகுக்காது" என்று அவர் கூறினார்.