மேலும் அறிய

Leaked Neet Questions | ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் லீக்கானது; ரூ.35 லட்சத்துக்கு விற்பனை: 8 பேர் கைது.. நடந்தது என்ன?

ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் தான் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. நீட் தேர்வு எழுதிய மாணவி ஒருவர் நீட் வினாத்தாளை தனது பொபைலில் புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளார். அது கசிந்து பலருக்கும் பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய குறிப்பிட்ட மாணவி உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் குறித்து போலீஸ் துணை ஆணையர் ரிச்சா தோமர் கூறியதாவது: 

நீட் தேர்வு எழுத ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அந்த மையத்தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவி தேர்வு எழுதச் சென்றிருந்தார். 

இந்தச் சம்பவத்தில் தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர் ராம் சிங்கும் உடந்தையாக இருந்துள்ளார். இவருக்கு நவரத்னா என்பவருடன் பழக்கம் இருந்துள்ளது. நவரத்னா பன்சூரில் நீட் தேர்வு பயிற்சி மையம் நடத்துகிறார். அவரது நண்பர் அனில் யாதவ் இ மித்ரா என்ற பயிற்சி மையம் நடத்துகிறார். இவரது அண்டைவீட்டுக்காரர் சுனில் யாதவ். இவரது உறவுக்காரப் பெண் தான் தானேஸ்வரி.


Leaked Neet Questions | ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் லீக்கானது; ரூ.35 லட்சத்துக்கு விற்பனை: 8 பேர் கைது.. நடந்தது என்ன?

Representational Image

இவர், ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி மையத்தில் தேர்வு எழுதவிருந்தார். தானேஸ்வரிக்காகவே நீட் தேர்வு வினாத்தாள் விலை பேசப்பட்டது.

தானேஸ்வரியின் மாமா பேரம் பேச ரூ.35 லட்சத்துக்கு வினாத்தாள் விற்பனைக்கு டீல் முடிக்கப்பட்டது. தானேஸ்வரி தேர்வு எழுதிய மையத்திலிருந்து ராம்சிங் என்பவர் தான் மறைத்துவைத்திருந்த மொபைல் போன் மூலம் புகைப்படம் எடுத்து வினாத்தாளை தானேஸ்வரியின் மாமாவுக்கு அனுப்பினார்.

அவரது மாமா வினாத்தாளை நீட் தேர்வு பயிற்சி மைய ஆட்களுக்கு அனுப்பி வைத்தார். பங்கஜ் யாதவ், சந்தீப் என இருவரும் சேர்ந்து தேர்வுத் தாளில் விடைகளை மார்க் செய்து அனுப்பினர். ராம்சிங்குக்கும், கல்லூரி நிர்வாகி முகேஷ் சமோடாவுக்கும் விடைத்தாளை அனுப்பினர்.

இதை அறிந்து கொண்ட போலீஸார் தேர்வு மையத்திலிருந்த தானேஸ்வரியிடமிருந்து விடைத்தாளையும் வினாத்தாளையும் பறிமுதல் செய்தனர். தேர்வு மையத்துக்கு வெளியிலேயே காரில் ரூ.10 லட்சம் பணத்துடன் தானேஸ்வரியின் மாமா காத்திருந்துள்ளார்.

இந்த விடைத்தாள் மொபைல் வாயிலாக சிகார் மாவட்டத்திலிருந்த இருவருக்கும் கசிந்தது. சிகாரைச் சேர்ந்த சுனில் ரின்வான், தினேஷ் பெனிவால் ஆகியோரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

மருத்துவ சேர்க்கைக்கான நாடு முழுவதும் தேசிய அளவில் நீட் எனும் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இந்த தேர்வைத் தமிழகத்தில் மட்டும் 1.10 லட்சம் பேர் எழுதினர். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு நடத்தப்படுவதால் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நசுக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. 

இந்நிலையில், கடந்த 12 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்குத் தொடங்கிய நீட் தேர்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. இந்த தேர்வுக்கு வருவோருக்கு என் 95 மாஸ்கை தேசிய தேர்வு முகமை வழங்கியது. இந்தத் தேர்வு இந்த ஆண்டு முதல்முறையாக தமிழ், மலையாளம், பஞ்சாபி உள்பட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்பட்டது. இதில் தமிழில் தேர்வு எழுத 19,867 பேர் விண்ணப்பித்திருந்தனர். நாடு முழுவதும் 16.10 லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். தமிழகத்தில் மட்டுமே 1.10 லட்சம் பேர் எழுதினர். 

தலைப்பு செய்திகள்

Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை.. ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
தமிழகத்தில் இன்று பரபரப்பு முதல் டெல்லி அரசியல் வரை! ஆகஸ்ட் 21-ம் தேதி TOP 10 முக்கிய செய்திகள்!
Gummidipoondi Gudur Train: தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - முழு விவரம்
தமிழ்நாட்டில் புது ரயில் வழித்தடம் - 90KM நீளம், ரூ.2,229 கோடி ப்ராஜெக்ட் - வேலைவாய்ப்பு, பலன் விவரங்கள்
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?
கேரளாவின் அதிசய கோவில்கள்: குறிப்பிட்ட நாட்களில் ஆண்கள் நுழைய தடை ஏன்?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: ”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
”இந்த உருட்டல் மிரட்டல் வேண்டாம்.! FILE-ஐ ஓபன் பண்ணுங்க சிஎம்” - சட்டசபையில் சீறிய உதயநிதி
Viral Video: ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
ஹோம் வொர்க் எங்கே? அறைந்த ஆசிரியை, மடியில் விழுந்து மரணித்த 6 வயது சிறுவன் - வகுப்பறை கொடூரம்
DMK vs TVK: களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
களேபரமான விவாதம் - அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினர்? நாஞ்சில் சம்பத் மீது சேர் தூக்கியடிப்பு
Education Scheme: கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
கடனில்லை, ரூ.36 லட்சம் வரை நிதியுதவி - கல்வி திட்டத்திற்கு விண்ணப்பிப்பது எப்படி? தேவையான ஆவணங்கள்
Somalia Pirates: மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
மீண்டும் கடலிறங்கிய சோமாலியா கொள்ளையர்கள்.! துருக்கி கப்பல் கடத்தல்; 6 இந்தியர்களின் கதி என்ன.?
Hyundai Cars Price Hike: ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
ஹூண்டாய் கார் வாங்குற ஐடியா இருந்தா உடனே போங்க; அடுத்த மாதம் விலைகள் உயருது; காரணம் இதுதான்
TN Weather News: சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Kia Sorento Hybrid Diesel: ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
ஃபார்ச்சூனருக்கு செக் வைக்குமா சொரெண்டோ.! ஹைப்ரிட் டீசல் பதிப்பை இறக்கும் கியா; அசத்தும் ஏஐ உதவியாளர்.!
Embed widget