NEET Exam 2022: நீட் : மாணவிகளின் உள்ளாடையை கழற்றச் சொன்ன விவகாரம்?! விசாரணை வேண்டி கடிதம்!
கேரளாவில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடையை கழற்றச் சொன்ன விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடத்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வு முகமைக்குதேசிய மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
NEET Exam 2022: கேரளாவில் நீட் தேர்வின் போது மாணவிகளின் உள்ளாடையை கழற்றச் சொன்ன விவகாரத்தில் நேர்மையான விசாரணை நடித்தி தண்டனை வழங்கப்பட வேண்டும். நீட் தேர்வு முகமைக்குதேசிய மகளிர் ஆணையத் தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.
மருத்துவ படிப்புக்கான தகுதி தேர்வான நீட் தேர்வு கடந்த ஞாயிற்றுக் கிழமை (ஜூலை 17) நாடு முழுவதும் நடைபெற்றது. கேரள மாநிலம் கொல்லம் ஆயூர் மார்தோமா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி சென்டரில் நடந்த நீட் தேர்வில், தேர்வு எழுத வந்த மாணவிகளின் 'பிரா'-க்களை அவிழ்த்துவிட்டு எக்ஸாம் ஹாலுக்கு அனுமதித்தனர். இதனால் மனதளவில் பாதிப்படைந்த மாணவிகள் அழுதுகொண்டே நீட் தேர்வு எழுதினர். இதுகுறித்து மாணவி ஒருவரின் பெற்றோர் போலீஸில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாணவியின் பெற்றோர் அளித்த புகாருக்கு தேசிய தேர்வு முகமை இப்படி ஒரு சம்பவம் நிகழவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும்,தேர்வின்போது, அதற்குப் பிறகும் யாரும் இதுதொடர்பாக எந்தப் புகாரையும் அளிக்கவில்லை. தேசியத் தேர்வுகள் முகமைக்கு எந்த விதமான இ-மெயிலோ, புகார்க் கடிதமோ வரவில்லை. தேசியத் தேர்வுகள் முகமையின் ஆடைக் கட்டுப்பாட்டு விதிகளின்படி, மாணவியின் பெற்றோரின் குற்றச்சாட்டு தொடர்பாக செயல்பாடை என்டிஏ அனுமதிக்கவில்லை. ஆடைக் கட்டுப்பாட்டு விதிகள், தேர்வு முறையாகவும் நேர்மையாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்யவே கடைப்பிடிக்கப்படுகின்றன. எனினும் தேர்வர்களை சோதனை செய்து, பாலின/ மத/ கலாச்சார / பிராந்திய உணர்வுகளை புண்படுத்துவது நோக்கமல்ல'' என தெரிவித்திருந்தது.
NCW has taken serious note of the reported incident where several girl students were forced to remove their innerwear during screening before NEET 2022 exam in Kerala. It is shameful and outrageous to the modesty of young girls. pic.twitter.com/267LzE9l4r
— ANI (@ANI) July 19, 2022
Chairperson NCW has written to Chairperson NTA to conduct an independent inquiry into allegations levelled by the girl students and to take appropriate action in accordance with law against the responsible. The Commission has also sought a time-bound investigation in the matter.
— ANI (@ANI) July 19, 2022
The Commission has also written to Director General of Police, Kerala to conduct a fair investigation in matter and to register FIR under the relevant provisions of law, if the allegations are found to be true. The action taken must be apprised to the Commission within 3 days.
— ANI (@ANI) July 19, 2022
இந்நிலையில், தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவர் இந்த சம்பவம் தொடர்பாக தேசிய தேர்வு முகமை தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், இந்த சம்பவம் முற்றிலும் கண்டணத்திற்குரியது. மாணவிகளின் மனநிலையினை முற்றிலும் சீர்குலைக்கக் கூடிய வகையில் தேர்வு முகமை அழுவலர்கள் நடந்து கொண்டுள்ளனர். தேசிய தேர்வு முகமை இச்சம்பவம் தொடர்பாக நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை தண்டிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கேரளாவின் டிஜிபிக்கு எழுதியுள்ள கடிதத்தில், சம்பந்தப்பட்ட நபர்கள் மூன்று நாட்களுக்கு மீது முறையான வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்களை தண்டிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறை நீட் தேர்வின் போது தேர்வு எழுத வருபவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படுத்தும் வகையில் ஏதாவது ஒரு நிகழ்வு நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்