மேலும் அறிய

PM Modi | பிரதமர் மோடி பிறந்தநாள்.. தடுப்பூசி சாதனை நிகழ்த்த வலியுறுத்தும் பாஜக தலைவர்கள்..!

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 71-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று 71-வது பிறந்தநாள். பிரதமரின் பிறந்தநாளை ஒட்டி தடுப்பூசி செலுத்துவதில் புதிய மைல்கல்லை எட்ட வேண்டும் என்று பாஜக திட்டமிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை ஒட்டி முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த முயற்சிக்கு சேவா சமர்பன் அபியான் எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இன்று செப்டம்பர் 17 தொடங்கி அக்டோபர் 7 2021 வரை இந்தத் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக நாடு முழுவதும் உள்ள பாஜக தொண்டர்கள் உற்சாகமாக செயல்பட வேண்டும் என்று கட்சி மேலிடம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், ”நாளை நமது அன்புக்குரிய பிரதமருக்குப் பிறந்தநாள். அதனால், நாட்டில் இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை தடுப்பூசி செலுத்தவைத்து நாம் தடுப்பூசி சேவை செய்வோமாக. இது தான் நாம் பிரதமருக்கு வழங்கக்கூடிய மிகச் சிறந்த பரிசு” என்று இந்தி மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

இதேபோல் பாஜக பொதுச் செயலாளர் தருண் சுக்கும் தடுப்பூசி திட்டத்துக்கு உதவி செய்வதன் மூலம் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை சிறப்பான வழியில் கொண்டாட வேண்டும் என்று பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டாவும் விரும்புகிறார் என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடியின் அரசியல் பயணம் 20 ஆண்டுகளை கடந்ததை முன்னிட்டும் சேவா சமர்பன் அபியான் என்ற திட்டத்தின் கீழ் 20 நாட்கள் மக்கள் நலப் பணிகளில் ஈடுபட இருப்பதாக பாரதிய ஜனதா கட்சி அறிவித்துள்ளது.

இந்நிலையில், பிரதமர் மோடியின் பிறந்தநாளை தேசிய வேலையில்லா திண்டாட்ட நாளாக காங்கிரஸ் கடைபிடிக்கிறது. இதுகுறித்து இளைஞர் காங்கிரஸ் தெரிவிக்கையில், “வேலையில்லா திண்டாட்டம் காரணமாக நாடு முழுவதும் கோடிக்கணக்கான இளைஞர்கள் மன அழுத்தத்திற்கு ஆளாகி இருக்கின்றனர். நாடு முழுவதும் 32 லட்சம் பேர் தங்கள் வேலையை இழந்து தவிக்கின்றனர். அதே நேரம் பிரதமர் நரேந்திர மோடியின் நண்பர்களான பெரு முதலாளிகளின் செல்வம் இந்த கொரோனா பெருந்தொற்று காலத்திலும் பல மடங்கு பெருகியுள்ளது. பகோடா பொருளாதாரம் (PAKODANOMICS) பேசியது போதும். இந்திய நாட்டின் இளைஞர்களுக்கு நிரந்தரமான வேலையை மத்திய அரசு வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாள் அன்று நாட்டில் வேலையின்றி தவிக்கும் இளைஞர்களின் துயரங்களையும், வேலையில்லா திண்டாட்டத்தால் நாடு எதிர்கொண்டுள்ள அபாயங்களையும் பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த தேசிய இளைஞர் காங்கிரஸ் முடிவு செய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
D.K.Shivakumar: உங்க வேலையை பார்க்குறது நல்லது.. விஜயை சீண்டிய டி.கே.ஷிவகுமார்.. நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
கேப் டிரைவருக்கு 100 ஆண்டு ஓட்ட தடை.. ரேபிடோவின் அநியாயம்.. கொதிக்கும் நெட்டிசன்கள் - நடந்தது என்ன?
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
சென்னை டூ கன்னியாகுமரி.. இனி 8 மணி நேரத்தில் செல்லலாம்.. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!
Embed widget