நாகாலாந்து மக்கள் மனிதர்களை சாப்பிடுவார்களா? சுவாரஸ்ய அனுபவத்தை பகிர்ந்து கொண்ட அமைச்சர்!
நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்கின் நகைச்சுவையான பதில்கள் மற்றும் பதிவுகள் நெட்டிசன்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன.
நாகாலாந்து அமைச்சர் டெம்ஜென் இம்னா அலோங்கின் நகைச்சுவையான பதில்கள் மற்றும் பதிவுகள் நெட்டிசன்களிடமிருந்து பெரும் பாராட்டைப் பெற்று வருகின்றன. 1999 ஆம் ஆண்டில் முதல் முறையாக டெல்லிக்குச் சென்ற அனுபவத்தை வேடிக்கையாக பேசி வீடியோவாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
1999 की और एक बातें... pic.twitter.com/BZnk4lF3uZ
— Temjen Imna Along (@AlongImna) July 13, 2022
நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் அவர், 1999 இல் முதல்முறையாக புது தில்லி ரயில் நிலையத்திற்கு வந்தபோது எப்படி உணர்ந்தார், மக்கள் அவரை எப்படி நடத்தினர் என்பதைப் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில், "1999இல் நான் டெல்லிக்கு சென்றபோது, நாகாலாந்தின் மக்கள் தொகையை விட பழைய டெல்லி ரயில் நிலையத்தில் இருந்தவர்களின் எண்ணிக்கையைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். நான் முற்றிலும் அதிர்ச்சியடைந்தேன்.
நாகாலாந்து எங்கே இருக்கிறது, அந்த இடத்தைப் பார்க்க எங்களுக்கு விசா வேண்டுமா என்று மக்கள் என்னிடம் கேட்டார்கள். நாகாலாந்து மக்கள் மனிதர்களையும் விலங்குகளையும் சாப்பிடுவதாக சிலர் வதந்திகளை பரப்பி வந்தனர்" என பேசி உள்ளார்.
அலோங்கின் புதிய வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இது 7,000 முறை ரீட்வீட் செய்யப்பட்டு 43,000 லைக்குகளைப் பெற்றுள்ளது. சமீபத்தில், இவரின் பெயரை கூகுளில் போடும்போது, அதில் கிடைக்கும் முடிவுகளை ஸ்கிரீன் ஷாட் எடுத்து ஒரு நாகாலாந்து அரசியல்வாதி பகிர்ந்து உள்ளார்.
அவரது வயதிற்குப் பிறகு, அலோங்கின் மனைவியைப் பற்றி அறிய நெட்டிசன்கள் மிகவும் ஆர்வமாக தேடி உள்ளனர். அவரது வாழ்க்கை வரலாறு மற்றும் அலோங்கின் வைரல் வீடியோ தேடல் முடிவுகள் அடுத்ததாக வந்திருக்கிறது. பதிவிடப்பட்டது முதல், ட்விட்டர் தளத்தில் 3,000 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் 35,000 க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.
கடந்த வார தொடக்கத்தில், நாகாலாந்து உயர்கல்வி மற்றும் பழங்குடியினர் விவகார அமைச்சராக இருக்கும் டெம்ஜென், வடகிழக்கு இந்தியர்களின் சிறிய கண்கள் பற்றி கருத்து பதிவிட்டிருந்தார். இது பெரும் வைரலானது.
திங்களன்று உலக மக்கள்தொகை தினத்தையொட்டி, நாகாலாந்து பாஜக தலைவராகவும் பதவி வகிக்கும் டெம்ஜென், மக்கள்தொகைப் பெருக்கம் தொடர்பான பிரச்னைகளில் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும் என்றும் குழந்தைப் பேறு பற்றி தெரிந்து கொள்ளவும் மக்களைக் கேட்டுக் கொண்டார். "அல்லது என்னைப் போல் சிங்கிலாக இருங்கள். ஒன்றாக இணைந்து நிலையான எதிர்காலத்திற்கு பங்களிக்க முடியும். இன்றே சிங்கில்ஸ் இயக்கத்தில் சேருங்கள்" என்றும் ட்வீட் செய்திருந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்