மேலும் அறிய

FM Nirmala Sitharaman : வாய டெட்டால போட்டு கழுவுங்க...எதிர்க்கட்சியினர் ஊழல் குற்றச்சாட்டுக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்..!

"சவால்கள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. 23-2024 நிதியாண்டிலும் இது தொடரும்"

ராஜஸ்தான் சட்டப்பேரவையில் நேற்று நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யபட்டது. நிதித்துறையை கவனித்து வரும் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய சட்டப்பேரவைக்கு தயாராக வந்தார்.

ஆனால், அவர் பட்ஜெட்டை வாசித்த சில நிமிடங்களில் அனைவரும் குழம்பினர். ஏனென்றால், அவர் கடந்தாண்டு பட்ஜெட்டை சட்டசபையில் வாசித்தார்.  பின்னர், தலைமை கொறடா இடைமறித்து, பட்ஜெட் உரையை தாக்கல் செய்வதை தடுத்து நிறுத்தினார். இந்த சம்பவத்திற்கு விளக்கம் அளித்த கெலாட், தான் வருந்துவதாகவும் நடந்தது தவறு என்றும் கூறினார்.

இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ள நிலையில், இந்த விவகாரத்தை முன்வைத்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் கட்சியையும் ராஜஸ்தான் முதலமைச்சர் கெலாட்டையும் கடுமையாக சாடி பேசினார்.

நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விவாதத்தில் பங்கேற்று பேசிய அவர், காங்கிரஸ் முன்வைத்த ஊழல் குற்றச்சாட்டுகளை மறுத்தார். வாயை டெட்டால் போட்டு கழுவும்படி கூறிய அவர், "ராஜஸ்தானில் சில பிரச்னைகள் உள்ளன. அவர்கள் கடந்த ஆண்டு பட்ஜெட்டை இந்த ஆண்டு வாசிக்கிறார்கள். 

அப்படிப்பட்ட தவறை யாரும் செய்யக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறேன். ஆனால், இன்று அது நடந்துவிட்டது, அதனால் அதைக் குறிப்பிட வேண்டும்" என்றார்.

இந்திய பொருளாதாரம் குறித்து பேசிய நிதியமைச்சர், "2023-24 பட்ஜெட்டின் சாராம்சத்தை நான் சில வார்த்தைகளில் கூறினால், இந்திய வளர்ச்சிக்கான தேவைகளை நிதி விவேகம் வரம்பிற்குள் சமநிலைப்படுத்துகிறது. 

இந்தியா தொற்றுநோயிலிருந்து மீண்டு வருவதையும், மீண்டு வருவதற்கான பாதை இருப்பதையும், நம்மால் மட்டுமல்ல, இந்தியப் பொருளாதாரத்தின் பல பார்வையாளர்களாலும் நாம் தெளிவாகக் கவனிக்க முடியும் என்ற பின்னணியுடன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

பிப்ரவரி 22 முதல் ரஷ்ய-உக்ரைன் போரும் நடந்து வருகிறது. குறிப்பாக வளர்ந்து வரும் சந்தைகளில் எங்களிடம்  இதன் விளைவாக தனித்துவமான பணவீக்க அழுத்தங்கள் இருந்தன. மேலும், சீனாவில் கோவிட் மீண்டும் எழுச்சி பெற்றிருப்பது நாம் எதிர்பார்க்காத ஒரு பரிமாணத்தைச் சேர்த்தது. 

இதனால் சர்வதேச பொருட்களின் விலைகள் அதிகரிக்க வழிவகுத்தது. மேலும் தீவிர வானிலையின் மாறுபாடுகள் இந்தியாவில் மட்டுமல்ல, பல நாடுகளில் உணவுப் பணவீக்கத்தைத் தூண்டின.

சவால்கள் இருந்தபோதிலும், இந்தியப் பொருளாதாரம் இன்னும் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக உள்ளது. 23-2024 நிதியாடண்டிலும் இது தொடரும்" என்றார்.

உணவு மானியம் குறித்து பேசிய அவர், "உணவு மானியம் கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்த்தப்பட்டு ரூ.1.97 லட்சம் கோடியாக உள்ளது.

உர மானியம் நடப்பு நிதியாண்டில் 1.05 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 2.25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மானியத்தை அதிகரிப்பதன் மூலம் உலகச் சந்தையில் உரங்களின் விலை உயர்விலிருந்து விவசாயிகளை அரசாங்கம் காத்துள்ளது" என்றார்.

தலைப்பு செய்திகள்

சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு செயலியில் சாதி பட்டியலை இணைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு அன்புமணி அவசர கடிதம்!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சாதிவாரி கணக்கெடுப்பு: குழப்பம் தவிர்க்க அன்புமணி மோடிக்கு அதிரடி கோரிக்கை!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
சிலிண்டர் புக் பண்ண முடியாதா? வாடிக்கையாளர்களே மிஸ் பண்ணாம படிங்க!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!
இந்தியாவில் பார்க்க முடியுமா? ஆகஸ்ட் 12-ல் நிகழும் அரிதான 4 விண்வெளி நிகழ்வுகள்! தவறவிடாதீர்கள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget