மேலும் அறிய
Advertisement
Headlines Today June 04: நேற்றைய நிகழ்வுகளை இன்றைய செய்திகளாக அறிய.. இதோ ஏபிபி-யின் காலை தலைப்புச் செய்திகள்..!
Headlines: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய தமிழக பயணிகள் 137 பேர் சிறப்பு ரயில் மூலம் சென்னை வருகை - தமிழக அமைச்சர்கள் வரவேற்பு
- ஒடிசா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் உயிரிழந்ததாக தகவல் இல்லை - அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்
- ஒடிசா சென்றுள்ள தமிழ்நாடு அமைச்சர்கள் தலைமையிலான குழு சில நாட்கள் அங்கேயே தங்கியிருந்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைவரும் சென்னை வருவதை உறுதி செய்யுமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு
- தமிழ்நாட்டில் 17 இடங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிய வெப்பம்: 4 ஆண்டுகளுக்குப் பின் ஜூன் மாதத்தில் சென்னையில்109 டிகிரி வெயில் பதிவானது
- கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில், சென்னையில் இருந்து கோவை சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்
- மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அருகே கோயில் ஆடல்-பாடல் நிகழ்ச்சி தொடர்பாக இருதரப்பினர் மோதல் - கார் மற்றும் பைக் உள்ளிட்ட 30 வாகனங்கள் அடித்து உடைப்பு
- மதுரை கூடல் அழகர் பெருமாள் திருவிழாவையொட்டி விமரிசையாக நடந்த தேரோட்டம் - திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
இந்தியா:
- நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு - சிகிச்சையிலிருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் - 382 பேருக்கு தொடர் சிகிச்சை
- ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் பிரதமர் மோடி நேரில் ஆய்வு - இரங்கல் தெரிவித்த உலக நாடுகளின் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்தார்
- ஒடிசா ரயில் விபத்து நடந்த பகுதியில் விடிய விடிய நடைபெறும் சீரமைப்பு பணிகள் - புதன்கிழமைக்குள் ரயில் போக்குவரத்தை மீண்டும் தொடங்க முனைப்பு என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தகவல்
- ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வே அமைச்சர் பதவி விலக எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் - ரயில்வேதுறையில் ஒருங்கிணைப்பு இல்லை என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சாடல்
- கோரமண்டல் விரைவு ரயில் லைன் மாறி சென்றதால் விபத்து என முதற்கட்ட விசாரணையில் தகவல்
- ஒடிசா ரயில் விபத்தை காரணம் காட்டி விமான கட்டணத்தை உயர்த்த வேண்டாம் - விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல்
- 6 நாள் பயணமாக சுரினாம் மற்றும் செர்பியா புறப்பட்டார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு
உலகம்:
- ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கு ஆயுத கட்டுப்பாடு - அமெரிக்கா அழைப்பு
- சுவீடனில் உடலுறவு விளையாட்டுக்கு அங்கீகாரம் - விரைவில் நடைபெறுகிறது சாம்பியன்ஷிப் போட்டி
- செனகல் நாட்டில் கலவரம் - போலீசார் - எதிர்க்கட்சியினர் மோதலில் 9 பேர் பலி
- இஸ்ரேலியில் வெப்பக்காற்று வீசியதால் 220 இடங்களில் தீ விபத்து
- அமெரிக்காவில் நடைபெற்ற ஸ்பெல்லிங் பீ போட்டி - கடினமான வார்த்தையை சரியாக உச்சரித்து சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன் தேவ் ஷாஹ்
விளையாட்டு:
- தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் - அரையிறுதியில் இந்திய வீரர் லக்சயா சென் தோல்வி
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் - நார்வேயின் ரூத் 4வது சுற்றுக்கு முன்னேற்றம், மகளிர் பிரிவில் ரிபாகினா உடல்நலக்குறைவால் தொடரிலிருந்து விலகல்
- ஒல்லி போப் அபாரம் - அயர்லாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
- ஜனவரி மாதத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறப்போவதாக ஆஸ்திரேலிய வீரர் வார்னர் அறிவிப்பு
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
அரசியல்
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion