மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: உள்ளூர் முதல் உலகம் வரை.. அத்தனையும் அறிய இதோ! .. ஏபிபியின் தலைப்புச் செய்திகள்!
Today Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு:
- ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெறுகிறது மீனவர் நல மாநாடு
- எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி வெற்றி பெறாவிட்டால் நாட்டை காப்பாற்ற முடியாது - முதலமைச்சர் ஸ்டாலின் ஆவேசம்
- தமிழ்நாட்டை திமுக தான் நிரந்தரமாக ஆளும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவில் வெளுத்து வாங்கிய கனமழை
- அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கு எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டுக்கு மாற்றம்
- மத்திய அரசு நிதி ஒதுக்கியும் கால்வாய்களை கூட திமுக அரசு தூர்வாரவில்லை - பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு
- கலைஞர் மகளிர் உரிமை திட்டத்திற்கான சிறப்பு முகாம் இன்று தொடங்குகிறது - இதுவரை ஒரு கோடியே 54 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக அரசு தகவல்
- ஆன்லைன் விளையாட்டிற்கு தடை விதிக்க அதிகாரம் உள்ளது - சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்
- தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5,077 கோடி மதிப்பிலான 5557 ஏக்கர் நிலங்கள் மீட்பு - அறநிலையத்துறை தகவல்
இந்தியா:
- இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஐ.என்.எஸ். விந்தியகிரி போர்க்கப்பலை தொடங்கி வைத்தார் குடியரசு தலைவர் திரவுபதி முர்மு
- சந்திரயான் 3 விண்கலத்தில் இருந்து வெற்றிகரமாக பிரிந்தது விக்ரம் எனும் லேண்டர் - நிலவை நோக்கி தள்ளும் பணி இன்று மாலை 4 மணிக்கு முன்னெடுக்கப்படுகிறது
- தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பே மத்தியபிரதேசம் மற்றும் சத்தீஸ்கரில் வேட்பாளர்களை அறிவித்தது பாஜக
- எதிர்க்கட்சிகள் கூட்டணியால் பிரதமர் மோடி கவலை - பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் பேட்டி
- இந்தியா கூட்டணியில் வெடித்தது முதல் தொகுதி பங்கீடு சர்ச்சை - மும்பை கூட்டத்தை புறக்கணிக்க ஆம் ஆத்மி திட்டம்
- பிரச்னையின் போது மவுனமாக இருப்பவர் தான் பிரதமர் மோடி - அர்விந்த் கெஜ்ரிவால் விமர்சனம்
- தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை தீறந்துவிடக் கோரி கர்நாடகத்தில் விவசாயிகள் போராட்டம் - உத்தரவை திரும்பப் பெறக்கோரி ஆணையத்தில் முறையிட கர்நாடக அரசு திட்டம்
- ஆந்திராவில் தன்பாலின ஈர்ப்பால் விபரீதம் - திருமண ஆசை காட்டி நண்பனை பெண்ணாக மாற்றிய இளைஞர்
உலகம்:
- மலேசியாவில் திடீர் கோளாறு காரணமாக ரன்வேக்கு பதிலாக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 10 பேர் உயிரிழப்பு
- ஹவாய் காட்டுத் தீ விபத்து - பலியானோரின் எண்ணிக்கை 111 ஆக அதிகரிப்பு
- மலேசியாவில் மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை - 702 வருடங்கள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி
- ரஷ்யா அனுப்பிய லூனா - 25 விண்கலம் - வெற்றிகரமாக நிலவின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது
- இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் விலைமதிப்புமிக்க பொருட்கள் திருட்டு - ஊழியர் பணிநீக்கம்
விளையாட்டு:
- கம்பேக்கில் மிரட்டுவாரா கேப்டன் பும்ரா - இன்று நடக்கிறது இந்தியா - அயர்லாந்து இடையேயான முதல் டி-20 போட்டி
- சின்சினாட்டி ஓபன் டென்னிஸ் - ஜோகோவிச் 3வது சுற்றுக்கு முன்னேற்றம் - ரஷ்ய வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion