மேலும் அறிய
Advertisement
8 AM Headlines: முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு.. வெனிசுலாவில் நிலநடுக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
8 AM Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- முதுநிலை நீட் தேர்வு ஒத்தி வைக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
- முதுநிலை நீட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது என பாமக தலைவர் அன்புமணி கண்டனம்.
- ஒவ்வொரு நாளும் மாணவர்களின் எதிர்காலத்துடன் பாஜக விளையாடுகிறது என மாணிக்க தாகூர் குற்றச்சாட்டு.
- கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.
- விபத்தில் சிக்கி சிகிச்சை பெற வருவோர் மது அருந்தியிருந்தால் ரத்த பரிசோதனை கட்டாயம்.
- தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை காலை வரை இயல்பை விட 129% கூடுதலாக பெய்துள்ளது.
- கர்நாடகத்தில் இருந்து காவிரியில் தமிழ்நாட்டுக்கு வினாடிக்கு 1,983 கன அடி தண்ணீர் திறப்பு.
- தமிழ்நாட்டில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 39 எம்.பி.க்கள் வருகின்ற ஜூன் 25ல் பதவியேற்பு.
- வினாத்தாள் கசிவால் நீட் பிஜி தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கம் அறிவிப்பு.
- மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பில் இருந்து அகோரம் நீக்கம்.
- தூத்துக்குடி: கார் விபத்தில் இறந்த 3 பெண்களின் குடும்பத்துக்கு அரசு தலா 3 லட்சம் நிதியுதவி.
- நெடுந்தீவு அருகே தமிழ்நாடு மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.
இந்தியா:
- 18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடக்கம்; ஜூலை 3 வரை நடைபெறுகிறது.
- மத்திய அரசின் உத்தரவை அடுத்து நீட் முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்தது சிபிஐ.
- மாணவர்களின் எதிர்காலத்துக்கு பாஜக அரசு அநீதி இழைத்துவிட்டது என ராஷ்ட்ரிய ஜனதா தளம் தெரிவித்துள்ளது.
- நீட் பிஜி தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது வெறும் கண் துடைப்பு நாடகம் - மல்லிகார்ஜூன கார்கே.
- நீட் முறைகேடு விவகாரத்தில் அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் - உத்தவ் சிவசேனா. குஜராத் மாநிலத்தில் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்தது அம்பலம்.
- மீண்டும் பயன்படுத்தக்கூடிய “புஷ்பக் விண்கலம்” சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு.
- ஜாமீன் நிறுத்தி வைத்த டெல்லி நீதிமன்றம் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு.
- தேர்வு ரத்துக்கு பதிலாக மத்திய பாஜக அரசை ரத்து செய்யலாம் என அகிலேஷ் யாதவ் காட்டம்.
- நீட் முறைகேடு தொடர்பான உண்மைகளை மூடி மறைக்க பாஜக அரசு முயற்சி - திரிணாமுல் காங்கிரஸ்
உலகம்:
- வெனிசுலா கடற்கரை அருகே ஏற்பட்ட பலத்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6 ஆக பதிவு.
- அமெரிக்காவின் கெண்டக்கியில் கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழப்பு.
- பாகிஸ்தான் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜினாமா செய்ய வேண்டும் - இம்ரான் கான்.
- சீனாவில் குடியிருப்பு பகுதிக்குள் ராக்கெட் பாகம் விழுந்ததால் மக்கள் அலறியடித்து ஓட்டம்.
- தஜிகிஸ்தானில் ஹிஜாப் அணிய தடை; மீறினால் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை.
- ஹவுதி அமைப்புக்கு குறி; ஏமனில் அமெரிக்க - பிரிட்டன் படைகள் வான்வழி தாக்குதல்.
- அமெரிக்காவின் பால்டிமோர் பாலம் விபத்து - 8 இந்திய மாலுமிகள் நாடு திரும்பியுள்ளனர்.
- விண்வெளி ஓடத்தில் தொழில்நுட்ப பிரச்சனை; சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவது ஒத்திவைப்பு.
- தைவான் சுதந்திரம் பற்றி தீவிர நிலைப்பாடு கொண்டோருக்கு மரண தண்டனை - சீனா.
- அகதிகள் முகாமில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 42 பாலஸ்தீனர்கள் உயிரிழப்பு.
விளையாட்டு:
- டி20 உலகக் கோப்பையில் இன்று நடைபெறும் சூப்பர் 8 சுற்றில் இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோத இருக்கின்றன.
- பெர்லின் ஓபன் டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஜெசிகா பெகுலா சாம்பியன் பட்டம் வென்றார்.
- இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மகளிர் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தொடரை வென்றது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion