மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக.. கேரளாவில் லேசான நிலநடுக்கம்.. இன்றைய ஹெட்லைன்ஸ்..!
Morning Headlines: நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளைத் தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- 200க்கும் அதிக தொகுதிகளில் வெற்றி பெறும் பணியை இன்று முதல் தொடங்குவோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- இதேபோல் ஆட்சி செய்தால் இன்னும் 25 ஆண்டுகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திமுக ஆட்சிதான் என காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
- வாயால் வடை சுடுவது எல்லாம் உங்கள் வேலை என்றும் தங்கள் எம்.பி.க்கள் கருத்துகளால் உங்களின் ஆணவத்தைச் சுடுவார்கள் என முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
- விக்கிரவாண்டி இடைத்தேர்தலை அதிமுக புறக்கணிப்போவதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- பக்ரீத் மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தாம்பரம் - நாகர்கோவில் இடையே (இன்று) ஞாயிற்றுக்கிழமை தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை இயக்க உள்ளது.
- புதுச்சேரியில் வீடுகளுக்கு முதல் 100 யூனிட்களுக்கான முன் கட்டணம் ரூ.2.25-ல் இருந்து ரூ. 2.75 ஆக உயர்த்த புதுச்சேரி அரசு கோரியது. அதை ரூ. 2.70 ஆக உயர்த்த அனுமதி தரப்பட்டுள்ளது.
- பக்ரீத் பண்டிகை குர்பானிக்காக செம்மறி ஆடுகள் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையிலும், கருப்பு ஆடுகள் ரூ. 8,000 முதல் ரூ.15,000 வரையிலும் விற்பனையாகியுள்ளது.
- தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கடலோர பகுதிகளில் அலை சீற்றத்துடன் காணப்படும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
- நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு கள்ளிகுளத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்து மிளகாய் பொடியை தூவி ஒன்பது பவுன் தாலி செயின் பறிப்பு.
இந்தியா:
- கேரளா மாநிலம் ஆலப்புழாவில் ஓடும் பள்ளி பேருந்தில் நேற்று தீப்பிடித்தது அதன் காட்சிகள் வெளியாகி உள்ளது.
- கேரளாவில் திருச்சூர் மற்றும் பாலக்காடு மாவட்டங்களில் சில இடங்களில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
- மக்களவை தேர்தல் முடிந்த நிலையில் கர்நாடக அரசு விற்பனை வரியை உயர்த்தியதால் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது.
- ஒடிசா முன்னாள் ஆளுநர் சந்திரகாந்த் வயது முதிர்வு காரணமாக காலமானார்.
- ஆந்திரா முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி வீட்டில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதி இடிக்கப்பட்டது.
- ஒடிசாவின் முதல் பெண் துணை முதலமைச்சரான பிரவதி பரீடாவுக்கு மகளிர் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி துறை, மிஷன் சக்தி மற்றும் சுற்றுலா மேம்பாட்டு துறை ஒதுக்கீடு செய்யப்பட்டது.
- திரிபுரா, மணிப்பூர், மிசோரம் மற்றும் நாகலாந்து மாநிலங்களிலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
உலகம்:
- ஜப்பானில் அரிய வகை நோய் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நோய் வந்தால் இரண்டு நாளில் மரணம் நிச்சயம் என்று கூறப்படுகிறது.
- காஸாவில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் தாக்குதல்; இஸ்ரேலிய வீரர்கள் 8 பேர் உயிரிழப்பு
- . பிலிப்பைன்ஸ்: நடப்பாண்டில் டெங்கு பாதிப்பால் இதுவரை 197 பேர் உயிரிழப்பு.
- பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பாகிஸ்தானில் பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது.
- தென்னாப்பிரிக்க அதிபராக மீண்டும் ரமபோசா தேர்வானார்.
விளையாட்டு:
- தமிழ்நாடு பிரீமியர் லீக் : 2024 தொடரின் 8-வது சீசன் வரும் ஜூலை 5-ஆம் தேதி சேலத்தில் தொடங்குகிறது.
- டி 20 உலகக் கோப்பை 2024ல் இந்தியா மற்றும் கனடா அணிகள் விளையாட இருந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion