![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Modi New Cabinet Reshuffle: 11 பெண்கள்.. டாக்டர், இன்ஜினியர், வக்கீல்.. - அமைச்சரவைப் பட்டியலில் என்ன ஸ்பெஷல்!
பட்டியலில் உள்ளவர்களில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் உள்ளனர்.
![Modi New Cabinet Reshuffle: 11 பெண்கள்.. டாக்டர், இன்ஜினியர், வக்கீல்.. - அமைச்சரவைப் பட்டியலில் என்ன ஸ்பெஷல்! Modi New Cabinet Reshuffle 11 women ministers 6 doctors 5 engineers and 13 lawyers details here Modi New Cabinet Reshuffle: 11 பெண்கள்.. டாக்டர், இன்ஜினியர், வக்கீல்.. - அமைச்சரவைப் பட்டியலில் என்ன ஸ்பெஷல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/07/07/154fffe2e5835031069e205d393f25df_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மத்திய பாரதிய ஜனதா அரசின் புதிய அமைச்சரவை விரிவாக்கப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 43 பெயர்கள் இடம்பெற்றுள்ள இந்தப் பட்டியலில் 11 பெண் அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். 50 வயதுக்கும் குறைவான 14 பேர் பெயர் பட்டியலில் உள்ளது. மீடியா அறிந்த முகங்களான ஜோதிராதித்ய சிந்தியா, மீனாட்சி லேகி உள்ளிட்ட பெயர்கள் பட்டியலில் உள்ளன. இது தவிர பட்டியலில் உள்ளவர்களில் 13 வழக்கறிஞர்கள், 7 முன்னாள் அரசு அதிகாரிகள், 6 மருத்துவர்கள், 5 பொறியாளர்கள் உள்ளனர்.
ஏற்கெனவே 12 முக்கிய அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்து கேபினெட்டுக்கான அமைச்சர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2024 தேர்தலை ஒட்டி மகாராஷ்டிரா, உத்திரப்பிரதேசம், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மூத்த தலைவர்களின் களவேலைகள் தேவையாக இருப்பதை அடுத்து அவர்கள் அமைச்சரவைப் பொறுப்பிலிருந்து விலகி கட்சியின் மாநிலப்பணிகளுக்கு அனுப்பப்படுகின்றனர். இதையொட்டியே அமைச்சரவை விரிவாக்கம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)