மேலும் அறிய

Udhayanithi Stalin: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கூடுதல் பொறுப்பு - தமிழ்நாடு அரசு முக்கிய உத்தரவு

கடந்தாண்டு இறுதியில் அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலினுக்கு தற்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல் முறையாக முதலமைச்சராக பதவியேற்றார். அந்த தேர்தலில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் நடிகரும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனார்.  

அமைச்சர் பொறுப்பு:

அவருக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. இதையடுத்து, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என அமைச்சர்கள், மூத்த தலைவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதற்கிடையே, அமைச்சரவை அமைக்கப்பட்டு 17 மாதங்கள் கடந்த நிலையில், டிசம்பர் 14ஆம் தேதி, உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றார். அதன்படி, ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவில் தமிழ்நாட்டு அரசின் அமைச்சராக உதயநிதி பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணமும், இரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

உதயநிதிக்கு கூடுதல் பொறுப்பு:

இதைத்தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சர்களின் எண்ணிக்கை 35ஆக அதிகரித்தது. உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகம் ஒதுக்கப்பட்டது. இந்த நிலையில், அமைச்சர் உதயநிதிக்கு தற்போது கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவர் பொறுப்பு வகிக்கும் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு கூடுதலாக திறன் மேம்பாட்டுக் கழகமும் மாற்றப்பட்டுள்ளது.

தொழிலாளர்நலத் துறை வசம் இருந்த திறன் மேம்பாட்டுக் கழகம் சிறப்புத்திட்டச் செயலாக்கத் துறைக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, அமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி, "தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என்றும், விமர்சனங்களுக்கு செயல்பாடுகள் மூலம் பதிலடி கொடுப்பேன்" என்றும் தெரிவித்திருந்தார்.

நடிப்பில் இருந்து விலகல்

படங்களில் நடிப்பது குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இனி படங்களில் நடிக்க மாட்டேன் என்றும் மாமன்னன் படம்தான் நான் நடிக்கும் கடைசிப் படம் எனவும் தெரிவித்திருந்தார். கமல் தயாரிப்பில் தான் நடிக்க இருந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்றும் உதயநிதி தெரிவித்துள்ளார். 

உதயநிதி ஸ்டாலினை நடிகராகவே கடந்த 2019 ஆம் ஆண்டு வரை மக்கள் அறிந்திருந்தனர். அவரின் தாத்தா கருணாநிதியின் மறைவுக்குப் பின் மெல்ல மெல்ல அரசியல் நிகழ்வுகளில் களம் கண்ட உதயநிதி 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து முதல் முறையாக அரசியல் மேடையில் களம் கண்டார்.

கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, ஒரே ஒரு செங்கலை வைத்து கொண்டு உதயநிதி செய்த பிரச்சாரம் மாநிலம் முழுவதும் பேசுபொருளானது. குறிப்பாக, மக்கள் மத்தியில் அந்த பிரச்சாரம் பெரிய அளவில் எடுபட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Embed widget