மேலும் அறிய

Manish Sisodia: சிக்கி தவிக்கும் சிசோடியா... பிணையை மறுத்த நீதிமன்றம்.. அடுத்து என்ன செய்யபோகிறார்?

துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, டெல்லியின் முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது.

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு பொறுப்பு வந்தபிறகு, மதுபான விற்பனை கொள்கையில் மாற்றம் கொண்டு வந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு நவம்பரில் டெல்லி அரசு புதிய மதுபானக் கொள்கையை அறிமுகம் செய்தது.

மணிஷ் சிசோடியா சிக்கியது எப்படி?

அதன்படி, டெல்லி பல மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு மதுபானம் விற்க உரிமம் வழங்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. இதனால், கடந்த 2022ஆம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு திரும்பப் பெற்றது. இதனிடையே, மதுபானக் கொள்கையை நடைமுறைப்படுத்தியதில் பெரும் முறைகேடு நடந்துள்ளதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய்குமார் சக்சேனா குற்றம்சாட்டினார்.

அதிரடி கைது:

துணைநிலை ஆளுநரின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இதுதொடர்பாக டெல்லி துணை முதலமைச்சராக பொறுப்பு வகித்த மணிஷ் சிசோடியா உட்பட 15 பேர் மீது மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, அரசியல் பதற்றத்தின் உச்சக்கட்டமாக ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா பிப்ரவரி 26ஆம் தேதி கைது செய்யப்பட்டார். 

கடந்த ஒரு வாரமாக சிபிஐ காவலில் உள்ள அவரின் காவல் மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அவர் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அவரின் காவலை மேலும் இரண்டு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் மீட்கப்பட வேண்டிய ஆதாரங்கள் அனைத்தும் ஏற்கனவே பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால், தன்னை காவலில் வைத்திருப்பது எந்தப் பலனையும் அளிக்காது என்று மணிஷ் சிசோடியா தரப்பு தனது ஜாமீன் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவலின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த ஏஜென்சி தயாராகி வருவதால், டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், விரைவு அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

டெல்லி அரசியலில் பதற்றம்:

மணிஷ் சிசோடியாவை போன்று மற்றொரு டெல்லி அமைச்சரான சத்யேந்தர் ஜெயினும் ஊழல் வழக்கில் சிறையில் உள்ளார். மணிஷ் சிசோடியாவும் சத்யேந்தர் ஜெயினும் கடந்த செவ்வாய்கிழமை தங்களின் பதவிகளை ராஜினாமா செய்தனர்.,

கைது செய்யப்பட்ட ஒரு நாளில், சிசோடியா உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ கைதுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். ஆனால், அவர் உயர் நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் பிறகு, சிசோடியா தனது வழக்கை வாபஸ் பெற்று, கீழமை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் தான், மணிஷ் சிசோடியாவின் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மணீஷ் சிசோடியாவின் 5 நாள் காவலின் முடிவில் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்திற்கு வெளியே டெல்லி போலீஸ், அதிரடிப் படை மற்றும் மத்திய ரிசர்வ் போலீஸ் படைகள் குவிக்கப்பட்டிருந்தன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
Embed widget