மேலும் அறிய

Manipur Case: மணிப்பூர் கலவரத்திற்கு முற்றுப்புள்ளி! சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்!

மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது.

Manipur Case: மணிப்பூரில் வன்முறை முடிவுக்கு வராத நிலையில், மணிப்பூர் உயர்நீதிமன்றம் தனது உத்தரவை வாபஸ் பெற்றுள்ளது. 

மணிப்பூர் கலவரம்:

தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி மெய்தி சமூக மக்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஆண்டு மே மாதம் பழங்குடியினர் பேரணி நடத்தினர். இந்த பேரணியில் வன்முறை வெடிக்க, மணிப்பூர் முழுவதும் கலவரம் பற்றி கொண்டது.

மணிப்பூரில் சுமார் 7 மாதங்களுக்கு மேலாக நடந்து வந்த இனக்கலவரம் இந்தியா மட்டும் இன்றி உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த இனக்கலவரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட குக்கி சோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்தவர்கள் நடுரோட்டில் நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்ற சம்பவம் தேசத்தின் மனசாட்சியை உலுக்கியது.

இந்த வன்முறையில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.  மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை திரும்பிவிட்டதாக அம்மாநில அரசு தெரிவித்து வந்தாலும், தினம் தினம் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

சர்ச்சைக்குரிய உத்தரவை திரும்பப்பெற்ற உயர் நீதிமன்றம்

 இந்த நிலையில், மெய்தி பிரிவினரை பழங்குடியினர் பிரிவில் சேர்த்து இட ஒதுக்கீடு வழங்க அரசு பரிசீலிக்க வேண்டும் என்ற உத்தரவை மணிப்பூர் உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது.  அதாவது, கடந்த ஆண்டு மார்ச் 27ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில், மெய்தி சமூகத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்ப்பதை 4 வாரங்களுக்குள் பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவு மணிப்பூரில் பெரும் இன வன்முறைக்கு வழிவகுத்தது.  இதனை அடுத்து, இந்த உத்தரவுக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ” மார்ச் 27, 2023 அன்று பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவின் பத்தியை நீதிமன்றம் நீக்குகிறது.

இந்த உத்தரவு கலவரத்துக்கு வழிவகுத்தது. சட்டத்தின் தவறான எண்ணத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த பத்தி  உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வின் நிலைப்பாட்டுடன் முரணாக இருக்கிறது. எனேவே, முந்தைய உத்தரவை நீக்க வேண்டியது அவசியம் இருக்கிறது” என்று மணிப்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூர் உயர்நீதிமன்ற பிறப்பித்த சர்ச்சைக்குரிய உத்தரவுக்கு நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடுமையாக சாடியது. அதன்படி,  "இடஒதுக்கீடு வழங்குவதற்கு மத்திய அரசுக்கு தான் உரிமை உள்ளது. அதில் நீதிமன்றங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை. இட ஒதுக்கீட்டை நீதிமன்றங்கள் மாற்றவோ, திருத்தவோ அல்லது மாற்றவோ முடியாது.  உயர் நீதிமன்ற வழங்கிய உத்தரவு தவறானது" என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க

"எதுக்கு இந்த பெயரை வச்சீங்க?” சிங்கத்திற்கு சீதா, அக்பர் பெயர் - கொல்கத்தா நீதிமன்றம் சரமாரி கேள்வி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல் சீட் கேட்கும் EVKS மகன் மக்கள் ராஜன் போர்க்கொடி  DMK AllianceKanguva in Oscar | OSCAR ரேஸில் கங்குவா தேர்வான பின்னணி என்ன? விமர்சனங்களுக்கு சூர்யா பதிலடி!Allu arjun meet Sritej | ”பையனை நான் பாத்துக்குறேன்”தந்தையிடம் கண் கலங்கிய அல்லு அர்ஜுன் | Pushpa 2

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"நீங்க எங்களுக்குப் பாடம் எடுக்க வேணா" சட்டப்பேரவையில் கொதித்த முதல்வர் ஸ்டாலின்!
"நாங்க இருக்கோம்" தோழனுக்கு தோள் கொடுத்த மம்தா.. இனி கெஜ்ரிவாலுக்கு நல்ல நேரம்தான் போல!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
திக் திக்.. நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்கள்.. களத்தில் இறங்கிய இந்திய கடற்படை!
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
மது பிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி: இந்த பீர்கள் இனி கிடைக்காது.! எங்கே? எதனால்?
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
அச்சு வெல்லமே... அச்சு வெல்லமே: தயாரிப்பு பணிகள் வெகு மும்முரம்
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
TNPSC Group 4: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வர்களே.. ஜன.22 முதல்- வெளியான முக்கிய அறிவிப்பு!
"இனி பணமே தேவை இல்ல" சாலை விபத்தில் சிக்கியவர்கள் நோ டென்ஷன்!
Embed widget