டெலிவரி பாய் போல் வேடமிட்டு வேலை வாங்கிய இளைஞர் ! கடுப்பான Zomato !
“ பலரின் விண்ணப்பங்கள் குப்பைக்கு போகின்றன. ஆனால் என்னுடைய விண்ணப்பம் உங்கள் வயிற்றுக்குள் போகட்டும் “ என எழுதி வைத்திருக்கிறார்.
கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு வேலை தேடுவது அவ்வளது எளிதானதாக இல்லை. நிறுவனங்கள் தற்போதுதான் தங்களில் நஷ்டங்களில் இருந்து மீண்டு கொண்டுருக்கின்றன. பொதுவாகவே வேலை தேடும் ஒரு புதிய பட்டதாரி , HR இன் நம்பிக்கையை பெறுவது மிக முக்கியமானது. அதற்காக சிலர் நேர்காணல்களில் சாதூர்யமாக பதிலளிப்பார்கள். ஆனால் பெங்களூருவை சேர்ந்த அமன் என்னும் இளைஞர் நூதன முறை ஒன்றை கையாண்டு வேலைக்கு விண்ணப்பித்திருக்கிறார்.
நூதன முறையில் விண்ணப்பம் :
தனது ரெஸ்யூமை , கேக் பாஸ்க் ஒன்றினுள் வைத்து , அதனுடன் இரண்டு கேக்குகளை வாங்கி வைத்து “ பலரின் விண்ணப்பங்கள் குப்பைக்கு போகின்றன. ஆனால் என்னுடைய விண்ணப்பம் உங்கள் வயிற்றுக்குள் போகட்டும் “ என எழுதி வைத்திருக்கிறார்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அமர் ஒரு பக்கம் ஸொமாட்டோ டி-ஷர்ட் அணிந்த புகைப்படத்தையும், மறுபக்கம் அந்த கேக் அனுப்பப்பட்ட புகைப்படத்தையும் பகிர்ந்திருக்கிறார். மேலும் “நான் ஸொமோட்டா நிறுவனத்தின் டி-ஷர்ட்டை அணிந்து எனது வேலைக்கான விண்ணப்பத்தை கேக்குடன் அனுப்பினேன் “ என சம்பந்தப்பட்ட நிறுவனத்தை டேக் செய்திருக்கிறார். அவர் ஒரு எம்.பி.ஏ பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
Dressed as a @zomato delivery boy I delivered my resume in a box of pastry.
— Aman Khandelwal (@AmanKhandelwall) July 2, 2022
Delivered it to a bunch of startups in Bengaluru.
Is this a @peakbengaluru moment.@zomato #resume pic.twitter.com/HOZM3TWYsE
கடுப்பான ஸொமாட்டோ !
என்னதான் அந்த இளைஞர் சாதூர்யமாக செயல்பட்டாலும் சமூக வலைத்தளங்களில் ஏராளமான எதிர்வினைகள் வர தொடங்கியது. இந்த இளைஞரின் செயலை அறிந்த ஸ்மாட்டோ நிறுவனம் “"ஹே அமன், உங்கள் 'கிக்' உங்களுக்கு ஏதாவது அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என நம்புகிறோம். யோசனை சிறப்பாக இருந்தது, ஆனால் ஆள்மாறாட்டம் - அவ்வளவு அருமையாக இல்லை" என தெரிவித்துள்ளது.
Hey Aman, hope your 'gig' landed you something meaningful. The idea was great, execution - top of the line, impersonation - not so cool.
— zomato care (@zomatocare) July 4, 2022
சக்ஸஸ்!
ஆனாலும் அந்த இளைஞருக்கு வேலை தர நிறுவனம் ஒன்று முன்வந்துள்ளது. டிஜிட்டல் குருகுல் மெட்டாவர்சிட்டி அவருக்கு இன்டர்ன்ஷிப் சலுகையுடன் ஒரு முதன்மை திட்டத்தை இலவசமாக வழங்கியுள்ளது . இது குறித்து நிறுவனம் தெரிவிக்கையில் ”உங்கள் சந்தைப்படுத்தல் திறனைப் பார்த்து - எங்கள் முதன்மைத் திட்டத்தை “டிஜிட்டல் ஸ்டார்ட்அப்பில்” இன்டர்ன்ஷிப்புடன் இலவசமாக வழங்க விரும்புகிறோம்! இது நிச்சயமாக உங்கள் வயிறு மற்றும் வாழ்க்கையை சரியான வடிவத்தில் மாற்றும் என்று நம்புகிறோம்“ என கூறியுள்ளது. இதே போல கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இளைஞர் ஒருவர் பீட்சா பெட்டிக்குள் தனது விண்ணப்பத்தை அனுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Looking at your Marketing skill -
— Digital Gurukul Metaversity (@digital_gurukul) July 3, 2022
We would like to offer our flagship program in “Digital Startup” for FREE with Internship!
Hope it will surely make your belly & career in perfect shape 😃