Man captures Leopard: சீறிபாய்ந்து தாக்கிய சிறுத்தை... பழிதீர்த்து பைக்கில் இழுத்து சென்ற இளைஞர்.. கர்நாடகாவில் பகீர் சம்பவம்..!
தன்னை தாக்கிய சிறுத்தையை, இளைஞர் ஒருவர் உயிருடன் பிடித்து, பைக்கில் கட்டி, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம், பாகிவாலு கிராமத்தின் புறநகர் பகுதியில், தன்னை தாக்கிய சிறுத்தையை, இளைஞர் ஒருவர் உயிருடன் பிடித்து, பைக்கில் கட்டி, வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிவாலு கிராமத்தைச் சேர்ந்த முத்து என்கிற வேணுகோபால் என்பவர்தான் இந்த சாகச இளைஞன் என்று கூறப்படுகிறது.
ஹாசன் மாவட்டம், அரசிகெரே தாலுகாவில் உள்ள கந்தாசிஹோப்ளி பாகிவாலு கிராமத்தில் புகுந்த சிறுத்தை, இரு சக்கரவாகனத்தில் வேலைக்குச் சென்று கொண்டிருந்த இளைஞரை தாக்கியுள்ளது. இதனை சற்று எதிர்பாராத இளைஞர் மீண்டும் தாக்கிய சிறுத்தையை விரட்டியடிக்க முயற்சித்துள்ளார். ஆனால் சிறுத்தை அவரை விட்டு விலகாமல் தொடர்ந்து அவரை தாக்கியுள்ளது.
சிறுத்தையின் தாக்குதலின் போது கை, கால்கள் மற்றும் உடலில் காயம் ஏற்பட்ட போதும் அவர் சிறுத்தையுடன் மல்லுக்கட்டினார். இதற்கிடையில் தனது பைக்கில் கயிற்றை எடுத்து சிறுத்தை தாக்க முற்பட்டபோது, அதன் வாயை கயிறு போட்டு கட்டியுள்ளார். அதன்பின்னர் சிறுத்தையின் கால்களும் உடலும் கயிற்றால் கட்டப்பட்டதால், அதனால் மேற்கொண்டு தாக்க முடியவில்லை, இதனால் கீழே சிறுத்தை விழுந்துள்ளது.
பின்னர் உடலில் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்து நான்கு கால்களையும் இணைத்து கட்டியுள்ளார். அதன் பின்னர் இருசக்கர வாகனத்தின் பின்பகுதியில் இருந்த கட்டையால் கட்டிவிட்டு சீடா கிராமத்திற்கு சென்று சிறுத்தையை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். இப்போது கர்நாடகா மாநிலம் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பரபரப்பாக பகிரப்படும் வீடியோவில் அந்த இளைஞர் இருசக்கர வாகனத்தில் சிறுத்தையை கட்டி எடுத்துக்கொண்டு போன வீடியோதான் டாப்பில் உள்ளது.