Crime: ரூ.500 பந்தயத்தில் தோல்வி... நண்பரின் தலையை துண்டாக்கி கையோடு எடுத்துச்சென்ற நபர்!
சுதந்திர தினத்தன்று அசாமில் ஒருவர் கால்பந்து போட்டியில் 500 ரூபாய் பந்தயத்தில் தோல்வியடைந்ததால் தனது நண்பரின் தலையை துண்டித்து கொலை செய்தார்.
சுதந்திர தினத்தன்று அசாமில் ஒருவர் கால்பந்து போட்டியில் 500 ரூபாய் பந்தயத்தில் தோல்வியடைந்ததால் தனது நண்பரின் தலையை துண்டித்து கொலை செய்தார். துண்டிக்கப்பட்ட தலையைப் எடுத்து கொண்டு 25 கி.மீ தூரம் நடந்தே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Assam Shocker! Man beheads villager over ₹ 500 bet on football match, walks with severed head for 25 kmshttps://t.co/CUCDy8Xvck
— Newsroom Post (@NewsroomPostCom) August 17, 2022
வடக்கு அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட கால்பந்து போட்டி முடிந்த சிறிது நேரத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
கொலையாளி என்று கூறப்படும் துனிராம் மாத்ரி, பொய்லா ஹேம்ராமிடம் பந்தயம் கட்டித் தோற்றுவிட்டதாகவும், ஆனால் அவருக்கு 500 ரூபாய் கொடுக்க மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
கால்பந்து போட்டிக்குப் பிறகு, துனிராம் மாத்ரி இரவு உணவிற்கு போயிலா ஹேம்ராமை வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது, ஒரு ஆட்டை அறுத்துக்கொண்டிருந்தபோது பணத்திற்காக இருவரும் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. பணம் கொடுக்க வேண்டும் என்று ஹேம்ராம் வற்புறுத்தியதால், ஆத்திரமடைந்த மாத்ரி அவரின் தலையை வெட்டினார்
Man Beheads Villager Over Rs 500, Reaches Police Station With Severed Head https://t.co/1Z4yiGRVnR
— Kashi Post (@PostKashi) August 17, 2022
மாத்ரி துண்டிக்கப்பட்ட தலையை எடுத்து சென்றதாகவும் அவரது மூத்த சகோதரர் அவரை பிடிக்க முயன்ற போது அவர் தப்பியோடியதாகவும் கூறப்படுகிறது.
பின்னர், துனிராம் மாத்ரி, 25 கி.மீ தூரம் நடந்தே சென்று, துண்டிக்கப்பட்ட தலையுடன், காவல் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து, கத்தியையும் காவல்துறையினரிடம் சமர்பித்துள்ளார்.
இதுகுறித்து காவல்துறை அலுவலர்கள் கூறுகையில், "அவர் விசாரணைக்காக காவலில் வைக்கப்பட்டு, வழக்கின் அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்பட்டு வருகின்றது" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்