மேலும் அறிய

”பாஜகவை கலைக்கவும் ஒரு சிலர் வரலாம்.. நீங்களும் ஆட்சியில் இருந்து போய்த்தான் ஆகவேண்டும்” - மம்தா பானர்ஜி

”உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். ஒரு நாள் நீங்களும் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம்” - மம்தா

மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சி மிகப்பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிவசேனாவுக்கு எதிராக அக்கட்சி எம்எல்ஏக்கள் 46 பேர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் பாஜகவின் குதிரை பேரத்தில் விலை போயிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

அசாமில் சிவசேனா எம்எல்ஏக்கள்

முன்னதாக எம்.எல்.ஏக்களுக்கு தான் முதலமைச்சராக இருப்பதில் விருப்பம் இல்லை என்றால் பதவி விலகத் தயாராக இருப்பதாக உத்தவ் தாக்கரே அறிவித்த நிலையில், முதலமைச்சர் இல்லமான வர்ஷா பங்களாவில் இருந்து நேற்று இரவு தன் குடும்பத்துடன் உத்தவ் தாக்கரே வெளியேறினார்.

மேலும், சிவசேனா எம்எல்ஏக்கள் அசாமில் தஞ்சம் அடைந்துள்ள நிலையில், பாஜகவும் ஆட்சியில் இருந்து ஒருநாள் சென்றாக வேண்டும் என்றும் அந்தக் கட்சியையும் யாராவது இதேபோல் உடைக்கலாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

சிவசேனா மூத்த தலைவரும், அம்மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான ஏக்னாத் ஷிண்டே, 
மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து 40க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களுடன் பாஜக ஆளும் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் தஞ்சம் அடைந்துள்ளார்.

பாஜகவையும் யாராவது உடைக்கலாம்

இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சிக் கவிப்பு நிகழலாம் எனக் கூறப்படும் நிலையில், அம்மாநில அரசியலில் பரபரப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக முன்னதாகப் பேசிய மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:

”உத்தவ் தாக்கரே மற்றும் அனைவருக்கும் நீதி வேண்டும். இன்று நீங்கள் (பாஜக) அதிகாரத்தில் உள்ளீர்கள். அதனால் பணம், மாஃபியா ஆகிய பலங்களை பயன்படுத்துகிறீர்கள். ஆனால் ஒரு நாள் நீங்களும் ஆட்சியில் இருந்து சென்றாக வேண்டும். உங்கள் கட்சியையும் யாராவது உடைக்கலாம்.

இந்த செயல் தவறு, இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. மஹாராஷ்டிராவுக்குப் பிறகு மற்ற மாநில அரசுகளையும் இவர்கள் கவிழ்ப்பார்கள். மக்களுக்கு நீதி வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா அரசியல் சூழல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்தம் 288 சட்டப்பேரவை இடங்கள் உள்ளன. அதில் 106 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. சிவசேனா 56 இடங்களில் வெற்றி பெற்றது. தேசியவாத காங்கிரஸ் 52 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 44 இடங்களில் வெற்றி பெற்றது. சுயேட்சை உள்ளிட்ட மற்றவைகள் 27 இடங்களில் வெற்றி பெற்றது. பெரும்பாண்மைக்கு 144 இடங்கள் தேவைப்பட்டது. அதனைத் தொடர்ந்து சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ’மகா விகாஸ்’ என்ற கூட்டணியில் 152 சீட்டுகளுடன் ஆட்சி அமைத்தது.

முன்னதாக இக்கூட்டணியின் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் உயிரிழந்த நிலையில், 144 சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சி அமைப்பதற்கு தேவை. இந்நிலையில், சிவசேனா மூத்த தலைவரும் மகாராஷ்டிரா பொதுப் பணித்துறை அமைச்சருமான ஏக்நாத் ஷிண்டே தலைமையில் அதிருப்தி எம்எல்ஏக்கள் கட்சிக்கு எதிராக திரண்டுள்ளனர்.  இந்நிலையில் கூட்டணி கட்சிகளுக்கு 131 உறுப்பினர்கள் உள்ளனர். இந்நிலையில் பெரும்பான்மைக்கு 133 இடங்கள் தேவை.

இந்நிலையில் தமக்கு 135 பெரும்பான்மை இருப்பதாக பாஜக கூறி வருகிறது. இது பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட 2 இடங்களே அதிகம். இது 27 இடங்களை கொண்டுள்ள மற்றவை ஆதரித்தால் மட்டுமே சாத்தியம் . ஆனால் சிவசேனா கட்சியில் இருந்த 21 உறுப்பினர்கள் பாஜகவுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் சட்டத்தின் அடிப்படையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். இது சிவசேனா கூட்டணி கட்சிகளுக்கு மிக சிக்கலான காலமாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் பாஜக கட்சியால் ஆட்சி அமைக்க முடியாது, அவர்களால் சிலரை விலைக்கு வாங்கி அசாதாரண சூழலை மட்டுமே ஏற்படுத்த முடியும் என மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் ஹரிஸ் ராவத் தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கைFengal Cyclone : ”வந்துட்டான்யா! வந்துட்டான்யா!சென்னையை நெருங்கும் புயல் வெளியே வராதீங்க மக்களே!மழைக்கான ஏற்பாடுகள் என்ன? கலெக்டர் கொடுத்த HINT! துண்டு சீட்டில் எழுதிய அமைச்சர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sekar Babu : ”முதல்வரை பற்றி பேச அருகதை இல்லை” ஜெயக்குமாரை விளாசிய சேகர்பாபு
Sabarimalai :  சபரிமலை செல்வோர் கவனத்திற்கு..  கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Sabarimalai : சபரிமலை செல்வோர் கவனத்திற்கு.. கனமழை எச்சரிக்கை! உஷார் நிலையில் பேரிடர் குழுவினர்
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Jai Shah : தொடங்கியது புதிய அத்தியாயம்! ஐசிசியின் தலைவரானார் ஜெய்ஷா..
Fengal Cyclone:  ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Fengal Cyclone: ஃபெஞ்சல் புயல் எதிரொலி..சேலத்தில் கொட்டித்தீர்த்த மழை! ஓரே நாளில் இவ்வளவு மி.மீ மழையா!
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Karthigai Deepam: நெருங்கும் கார்த்திகை தீபம்! களைகட்டும் திருவண்ணாமலை! பரணி தீபம், மகா தீபம் எப்போது?
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ்  நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
Donald Trump: டாலருக்கே மாற்றா? 100% வரி வரும் - இந்தியா உள்ளிட்ட பிரிக்ஸ் நாடுகளுக்கு மிரட்டல் விடுத்த ட்ரம்ப்
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
WTC Final: பவுமா பாய்ஸ்னா சும்மாவா! இந்தியா, ஆஸி.க்கு ஆப்பு வைக்கும் தென்னாப்பிரிக்கா?
Embed widget