ED Raid : ’பாஜகவின் பழிவாங்கும் செயல்கள்...’ : தலைமைச் செயலகத்தில் நடந்த ரெய்டுக்கு எதிராக கொதித்தெழுந்த தேசிய கட்சிகள்..
சென்னையில் உள்ள தலைமை செயலகத்துக்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்திற்குள் நுழைந்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக மீதான பாஜகவின் அரசியல் பழிவாங்கலை கண்டிக்கிறேன். விசாரணை அமைப்புகளை பாஜக அரசு தவறாக பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்கிறது. தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சரின் அலுவலகம் மற்றும் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் ED சோதனை நடத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. இவை பாஜகவின் பழிவாங்கும் செயல்கள்” என பதிவிட்டு இருந்தார்.
I condemn the political vendetta by BJP against DMK @arivalayam today. Misuse of central agencies continues. ED raids in Tamil Nadu at office of Minister for Prohibition and Excise at the state secretariat and his official residence are unacceptable. Desperate acts by BJP.
— Mamata Banerjee (@MamataOfficial) June 13, 2023
அமலாக்கத்துறை சோதனை - மல்லிகார்ஜூன கார்கே கண்டனம்
தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜியின் அலுவலக சோதனையில் அமலாக்கத்துறையை அப்பட்டமான துஷ்பிரயோகமாக பயன்படுத்தியதை காங்கிரஸ் கட்சி கண்டிக்கிறது.
துன்புறுத்தல் மற்றும் மிரட்டல் போன்றவற்றை செய்யும் மோடி அரசின் வெட்கக்கேடான முயற்சிகள் இவை. அரசியல் எதிரிகளுக்கு எதிராக புலனாய்வு அமைப்புகளின் இத்தகைய மோசமான துஷ்பிரயோகம் மோடி அரசாங்கத்தின் அடையாளமாகும்.
Statement issued by Congress President Shri Mallikarjun Kharge @kharge condemning the blatant misuse of the ED in searching the office of Tamil Nadu Electricity Minister Thiru V. Senthil Balaji. pic.twitter.com/h6o2MzinqN
— Jairam Ramesh (@Jairam_Ramesh) June 13, 2023
இந்த உத்திகளின் மூலம் எதிர்கட்சிகளின் வாயை அடைப்பதில் வெற்றியடையாது. மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தைத் தொடரும் உறுதியை இன்னும் வலுப்படுத்தவே செய்யும்
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்:
எதிர்க்கட்சிகளைத் துன்புறுத்துவதற்கும், மிரட்டுவதற்கும் மத்திய அமைப்புகளை பாஜக தவறாகப் பயன்படுத்துகிறது. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜிக்கு எதிரான ED ரெய்டுகளுக்கு கடும் கண்டனம்.
BJP’s misuse of central agencies to harass and intimidate the opposition continues unabated. Strongly condemn the ED raids against Thiru V Senthil Balaji, Tamil Nadu’s Electricity Minister.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) June 13, 2023
Blinded by political vendetta, the BJP is causing irreversible damage to our democracy.
அரசியல் பழிவாங்கலால், நமது ஜனநாயகத்திற்கு மாற்ற முடியாத சேதத்தை பாஜக ஏற்படுத்துகிறது.
சரத் பவார்:
I strongly condemn ED’s incessant actions against the Ministers of Govts ruled by Opposition Parties. With the raids on Senthil Balaji’s office, ED has now ventured to the southern states with its sinister motive to crush the voice against undemocratic Central Government.
— Sharad Pawar (@PawarSpeaks) June 13, 2023
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அமைச்சர்களுக்கு எதிராக ED இன் இடைவிடாத நடவடிக்கைகளை நான் கடுமையாக கண்டிக்கிறேன். செந்தில் பாலாஜியின் அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனைகளின் மூலம், ஜனநாயக விரோத மத்திய அரசு, தங்களுக்கு எதிரான குரலை நசுக்கும் அதன் மோசமான நோக்கத்துடன் தற்போது தென் மாநிலங்களிலும் கைவரிசையைக் காட்டுகிறது