Watch Video : சமையல் அதிகாரிக்கு பளார் விட்ட சிவசேனா எம்.எல்.ஏ..! நடந்தது என்ன..? வைரல் வீடியோ உள்ளே..!
மகாராஷ்ட்ராவில் மதிய உணவுத் திட்ட உணவு சரியில்லை என்று சமையல் பொறுப்பாளரை சிவசேனா எம்.எல்.ஏ. அறைந்த வீடியோ வைரலாகி வருகிறது.
மகாராஷ்ட்ராவில் சிவசேனா – பா.ஜ.க. கூட்டணி அமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்களில் ஒருவராக வலம் வருபவர் எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கர். இந்த நிலையில், சந்தோஷ் பங்கர் ஒருவரை தலையில் தட்டியும், கன்னத்தில் அறைந்தும் அநாகரீகமாக ஈடுபட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டைப் போலவே மகாராஷ்ட்ராவிலும் மதிய உணவுத்திட்டம் உளளது. எம்.எல்.ஏ. சந்தோஷ் பங்கர் அந்த மாநிலத்தில் உள்ள ஹிங்கோலி மாவட்டத்தில் ஊழியர்களுக்கு விநியோகிக்கப்படும் மதிய உணவுத் திட்டத்தை நேரில் சென்று ஆய்வு செய்தார். அவர் ஆய்வு மேற்கொண்ட பகுதியில் தொடர்ந்து தரமற்ற உணவு விநியோகிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்து வந்தது.
Shiv sena Shinde group MLA Santosh Bangar slaps caterer over poor food quality.
— Vivek Gupta (@imvivekgupta) August 16, 2022
Incident took place in Hingoli yesterday pic.twitter.com/dOpYGHxQly
இதையடுத்து, அங்கே நேரில் சென்று சந்தோஷ் பங்கர் ஆய்வு செய்துள்ளார். அங்கே உணவின் தரம் சரியில்லை என்பதை சுட்டிக்காட்டி அங்கே இருந்த சமையல் பொறுப்பாளரிடம் கேள்வி கேட்டார். மேலும், அங்கே இருந்த பதிவேடுகளை சுட்டிக்காட்சி சந்தோஷ் பங்கர் கேள்விகளை எழுப்பினார். அவர் முறையாக பதிலளிக்காததை கண்டு அவரது சட்டையைப் பிடித்து இழுத்து தலையில் தட்டினார்.
மேலும் படிக்க : நாய்க்கு பாலியல் தொந்தரவு... ரகசிய வீடியோவால் அம்பலம்... அமெரிக்க காதலர்கள் கைது!
பின்னர், அந்த சமையல் பொறுப்பாளர் முறையாக பதிலளிக்காததால் அவரது கன்னத்தில் பளார் என்று அறைந்தார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. எம்.எல்.ஏ.வின் செயலுக்கு பலரும் பலவித கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
தற்போது, ஊழியரை அறைந்து சர்ச்சையில் சிக்கியுள்ள சந்தோஷ் பங்கர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கிக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க : Watch Video : இதுவும் நரம்பு புடைக்கும் மொமெண்ட்தான்.. இந்தியர்களுக்கு ட்ரீட் கொடுத்த பாகிஸ்தான் இசைக்கலைஞர்
மேலும் படிக்க : ஆங் சான் சூகிக்கு மேலும் 6 ஆண்டுகள் சிறை... மியான்மரை அச்சுறுத்தும் ராணுவ ஆட்சி... ஒடுக்கப்படும் மக்கள்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்