Pariksha Pe Charcha: மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை நேரில் சந்திக்கும் பிரதமர் மோடி; கலந்துகொள்வது எப்படி?- விவரம்!
Pariksha Pe Charcha 2025: தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை பிரதமர் மோடி சந்தித்துப் பேச, பரிக்ஷா பே சார்ச்சா என்னும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இதில் கலந்துகொள்வது எப்படி என்று காணலாம்.
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், தேர்வை எழுதும் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். பொதுத் தேர்வுகள், தேர்வு அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். தொடர்ந்து 8-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்வில் கலந்துகொள்வது எப்படி?
- இந்த நிகழ்வில் கலந்துகொள்ள mygov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். வழக்கமாக இதற்கு 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும்.
- தற்போது 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் இந்தத் திட்டம் விரிவு செய்யப்பட்டுள்ளது.
- https://innovateindia1.mygov.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து, கொள்குறி வகை கேள்விகளுக்கு விடை அளிக்க வேண்டும்.
- அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம்.
முதன்முறையாக “பரிக்ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது.
2 கோடிக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்ட நிகழ்ச்சி
அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாகவும் மீண்டும் தற்போது நேரடியாகவும் பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. தற்போது வரை 205.62 லட்சம் மாணவர்களும் 14.93 லட்சம் ஆசிரியர்களும் 5.69 லட்சம் பெற்றோர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த முறை, டெல்லியில் தர்பார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: mygov.in
Before You Go
Pregnant Woman Attack On Train | ரயிலில் கர்ப்பிணிக்கு கொடூரம்”அந்த சைக்கோவை விடாதீங்க” ஹேமராஜின் பகீர் பின்னணி!
ட்ரெண்டிங் செய்திகள்























