10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று.. மகாராஷ்டிர துணை முதலமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் 10 அமைச்சர்கள், 20 எம்எல்ஏக்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில துணை முதலமைச்சர் அஜித் பவார் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கோரேகான் பீமா போரின் 204 வது ஆண்டு விழாவில் அஜித் பவார் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Nashik | A total of 10 ministers and over 20 MLA's have tested positive for COVID19 in Maharashtra, says Deputy CM Ajit Pawar pic.twitter.com/kc2yXVxC4t
— ANI (@ANI) January 1, 2022
மகாராஷ்டிராவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், மேலும் பல்வேறு கட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,067 ஆக பதிவாகியுள்ளது. இது கடந்த வியாழன்கிழமையை காட்டிலும் 50 % சதவீதம் அதிகம் என்றும் தெரிகிறது. மகாராஷ்டிராவில் உள்ள மும்பை மற்றும் புனேவில் கொரோனா பரவல் பாதிப்பு 2 மடங்காக அதிகரித்து வருகின்றது.
If the number of #COVID patients keep increasing in the state then the government may have to impose more restrictions, Maharashtra Deputy CM Ajit Pawar added
— ANI (@ANI) January 1, 2022
புத்தாண்டு, பிறந்த நாள் மற்றும் பிற நிகழ்வுகளின் கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக இருக்கவே பொதுமக்கள் அனைவரும் விரும்புகிறார்கள். புதிய மாறுபாடு (Omicron) தற்போது மஹாராஷ்டிராவில் வேகமாக பரவுகிறது. இதற்கான எச்சரிக்கை பொதுமக்கள் கண்டிப்பாக உணரவேண்டும். ஒமிக்ரான் பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு மாநிலங்களில் இரவு ஊரடங்கு பிறப்பிக்க அறிவுறுத்தி வருகிறார்.
நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் பட்சத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். கொரோனா பரவலை தடுக்க, அனைவரும் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று துணை முதலமைச்சர் அஜித் பவார் கோரிக்கை வைத்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்